Published : 27 Jul 2018 09:59 AM
Last Updated : 27 Jul 2018 09:59 AM
பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை பள்ளிகளின் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்க ளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
வேலூர் மாவட்டம் கொண்டா புரத்தைச் சேர்ந்த ஜெ.முகமது அலி சித்திக் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம், வேலூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாதுகாப் புக்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இதையடுத்து, அந்தத் தகவல் களை அளிக்குமாறு திருவண்ணா மலை மாவட்ட மெட்ரிக் பள்ளி கள் ஆய்வாளருக்கு உத்தரவிடப் பட்டது. ஆனால், எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. எனவே, முகமது அலி சித்திக் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், “தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது இணையதளத்தில் பள்ளியின் தலைவர், அறங்காவலர்கள், முதல்வர், ஆசிரியர்கள், ஓட்டுநர் உள்ளிட்ட இதர பணியாளர்களில் யார் மீதாவது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும்.
இந்தத் தகவல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். குற்ற வழக்குகள் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்கும் தகவல்களை அளிக்குமாறு மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களுக்கு மாநில குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குநர் அறிவுறுத்த வேண்டும். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரக பொது தக வல் அலுவலர், மாநில குற்ற ஆவண காப்பக பொது தகவல் அலுவலர் ஆகியோர் ஆணை யத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டி ருந்தார்.
இந்நிலையில், மாநில குற்ற ஆவண காப்பகத்தின் பொது தகவல் வழங்கும் அதிகாரி இ.மகேஷ், மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், “தகவல் ஆணையத்தின் உத்த ரவை தொடர்ந்து மாநில குற்ற ஆவண காப்பக ஏடிஜிபி சீமா அகர்வால் ஜூலை 17-ம் தேதி அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதேபோல, மத்திய குற்ற ஆவண காப்பகம், அனைத்து மாவட்ட குற்ற ஆவண காப்பகங்களும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என்று தெரி வித்துள்ளார்.
அதேபோல, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் துணை இயக்கு நரும், பொது தகவல் வழங்கும் அலுவலருமான ஆ.அனிதா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடந்த 20-ம் தேதி அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில், “பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது ஏதேனும் குற்ற வழக்கு இருப்பின் அதன் விவரத்தை பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT