Published : 02 Aug 2014 12:10 PM
Last Updated : 02 Aug 2014 12:10 PM

ராகுல், சோனியா மீதான புகாருக்கு நட்வர்சிங்கிடம் ஆதாரம் இருக்கிறதா?- ஞானதேசிகன்

சோனியா காந்தியை பிரதமர் பதவி ஏற்கக் கூடாது என்று ராகுல்காந்தி சொன்னதற்கு நட்வர்சிங்கிடம் ஆதாரம் இருக்கிறதா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நட்வர் சிங் அவரது சுயசரிதை ஒன் லைப் இஸ் நாட் இனப் என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகள் தொடர்பாக பெரும் சர்ச்சை நிலவிவருகிறது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "காங்கிரஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட இருக்கிறார். இந்த புத்தகத்தில் சோனியா காந்தியை பற்றியும், ராகுல்காந்தியை பற்றியும் எழுதி, சோனியா காந்தி 2004ல் பிரதமர் பதவி ஏற்க மறுத்த காரணம், ராகுல் காந்தி தன் பாட்டியைப் போல், தந்தையைப் போல் ஆகிவிடக் கூடாது என்ற அச்சத்திலும், அவரின் வற்புறுத்தலின் பேரில் பதவியேற்கவில்லை என்று எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பிய போது அமைசச்ரவையின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டார் என்றும் 45 ஆணடுகள் குடும்ப நண்பராக இருந்த தன்னை மிக மோசமாக சோனியா காந்தி நடத்தினார் என்றும், வேறு இந்தியராக இருந்தால் இது நடந்திருக்காது என்றும் நட்வர்சிங் அந்த புதத்கத்தில் பதிவு செய்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்திருக்கிறது.

முன்பெல்லாம் புத்தகம் எழுதுபவர்கள் சுயசரிதை எழுதுபவர்கள் சரித்திர சான்றுகள் மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்பவார்கள் உள்ளது உள்ளபடி எழுதி, அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் ஆய்வுக்கு உட்படுத்தபப்டும் என்பது வழக்கம். இன்றைக்கு அந்த நிலை மாறி, தன் சொந்த லாபங்களுக்காக பல்வேறு கருத்துக்களை பதிவு செய்வதும், அதற்காக எந்த ஆதார குறிப்பும் இல்லாமல், தன் புதத்கங்கள் விற்க வேண்டும், மக்கள் மத்தியில் பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்று அரசியலில் பணியாற்றியவர்கள், அரசியல்வாதிகள் புத்தகங்கள் எழுதுவது நடைமுறை வழக்கமாகி வருகிறது.

ராகுல்காந்தி, சோனியா காந்தியை பிரதமர் பதவி ஏற்கக் கூடாது என்று சொன்னதற்கு நட்வர்சிங்கிடம் உள்ள ஆதாரம் என்ன? நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை என்று நீதிமன்ற கூண்டுக்குள் நின்று சத்தியம் செய்கிற சாட்சிகள் கூறுகிற வாக்குமூலங்கள் பொய்யாகிற போது, புறக்கணிக்கபப்ட்ட ஒரு அரசியல்வாதியின் கருத்து எந்த வகையில் உண்மையாக இருக்க முடியும் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்" என கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x