Published : 16 Apr 2025 04:42 AM
Last Updated : 16 Apr 2025 04:42 AM

பிரிவினைவாதத்தை தூண்டுகிறது திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி குறித்து அறிவிப்பு வெளியிட்டு பேசினார். அப்போது அதை ஏற்காமல் பேரவையில் இருந்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மாநில சுயாட்சி குறித்து அறிக்கையை வாசித்தார். அதை ஏற்க இயலாது. மாநிலங்களுக்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது என்பதுதான் எங்களது கருத்து. இதையொட்டியே வெளிநடப்பு செய்துள்ளோம்.

நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. 2013-ம் ஆண்டு மே மாதம் நீட் தேர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி 2014-ல் தான் ஆட்சிக்கு வந்தார். எனவே, அதற்கு முன்பே எல்லாம் இருந்திருக்கிறது. அப்படி இருக்கையில் எப்படி பாஜக மாநில உரிமையை பறிக்க முடியும்.

அதேபோல் ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. நடைமுறைபடுத்தியது தான் பாஜக. ஜிஎஸ்டியை பொறுத்தவரை ஒரு ரூபாயில், 50 பைசா மாநில அரசுக்கு சென்று விடும்போது, மீதமுள்ள 50 பைசாவில் 29 பைசா மீண்டும் மாநில அரசுக்கு தான் செல்கிறது. ஆனால் இதை மறைத்து ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே மாநில அரசுக்கு கிடைப்பதாக சொல்கின்றனர்.

இதற்கிடையே மும்மொழிக் கொள்கையில் இந்தியை திணிப்பதாக சொல்கின்றனர். தமிழகத்தில் தெலுங்கு, மலையாளம் பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அதனால் மும்மொழிக் கொள்கையில் ஏதாவது ஒரு இந்திய மொழியை சேர்த்து படித்தால் போதுமானது என்பதைதான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது.

மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்கிற பிரிவினைவாதத்தை தான் இவர்கள் தூண்டுகிறார்களே தவிர, இந்திய அரசு ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இந்தியா வல்லரசாக நாடாக மாற வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.

தனித் தமிழ்நாடு வேண்டும், தனிக் கொடி வேண்டும் என்று மட்டுமே அவர் நினைக்கிறார். நம் நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே இருக்கும் நிலையில் தேர்தலையொட்டி, ஏதாவது ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை மனதில் கொண்டு இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர்.

இது மக்களுக்கு விரோதமானது. தேசத்துக்கு விரோதமானது. மக்கள் இதை சிந்தித்து பார்த்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்த்து மழையில் நயினார் நாகேந்திரன்: தமிழக பாஜக​வின் புதிய தலை​வ​ராக நயி​னார் நாகேந்​திரன் எம்​எல்ஏ பொறுப்​பேற்​றுள்​ளார். தலை​வ​ராக பொறுப்​பேற்ற பின்​னர் முதல்​முறை​யாக சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில் பங்​கேற்​ப​தற்​க​காக நயி​னார் நாகேந்​திரன் நேற்று தலை​மைச் செயல​கம் வந்​தார். அப்​போது, பேர​வைத் தலை​வர்

அப்​பாவுவை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். அதன்​பின்​னர் சட்​டப்​பேர​வைக்​குள் நுழைந்த அவருக்​கு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வாழ்த்து தெரி​வித்​தார். அதைத் தொடர்ந்து அதி​முக, பாமக மற்​றும் திமுக கூட்​ட​ணியை சேர்ந்த விசிக, காங்​கிரஸ், கம்​யூனிஸ்ட், மதி​முக உறுப்​பினர்​களும் வாழ்த்​து கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x