Published : 21 Jul 2018 10:22 AM
Last Updated : 21 Jul 2018 10:22 AM
சுகம்யா பாரத் அபியான் திட்டத்தின் கீழ், நடப்பு நிதியாண்டில் 5 அஞ்சல் நிலையங்களில் ரூ.15 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டர், படிக்கட்டுகள், கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அஞ்சல்துறை திட்டமிட்டுள்ளதாக, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் குறித்து ஐ.நா. சபை மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டதன் அடிப்படை யில், மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு சுகம்யா பாரத் அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத் தியது. ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அரசு அலு வலகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும்படி அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுப்பதே இத்திட்டத்தின் முக் கிய நோக்கமாகும்.
இதுகுறித்து, சென்னை நகர அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3-ம் தேதியன்று பிரதமர் மோடி சுகம்யா பாரத் அபியான் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.
அஞ்சல்துறையில் இத்திட்டத் தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளன. இதன்படி, அஞ்சல் நிலைய கட்டிடங்களுக்குள் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வருவதற்கு வசதியாக கைப்பிடி யுடன் கூடிய சாய்தள படிக்கட்டுகள் அமைக்கப்படும்.
அதேபோல், மாற்றுத்திற னாளிகளின் வசதிக்காக அஞ்சல் நிலைய கவுன்ட் டர்களில், ஒரு கவுன்ட்டரின் உய ரம் குறைக்கப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத் யேக கழிப்பறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் சென்னை யில் தி.நகர், திருவள்ளூர் மாவட் டத்தில் ஆவடி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஆகிய 5 தலைமை அஞ்சல் நிலையங்களில் தலா ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பில் இவை அமைக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வசதிகள் பிற அஞ்சல் நிலையங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.
ஏற்கெனவே, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம், திரு வள்ளூர், திண்டிவனம், திருவண் ணாமலை, தாம்பரம், பூங்காநகர், செயின்ட் தாமஸ் மவுன்ட் மற்றும் தி.நகர் ஆகிய 8 அஞ்சல் நிலை யங்களில் மாற்றுத்திறனாளி களுக்கான பிரத்யேக கழிப் பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆனந்த் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT