Published : 12 Apr 2025 06:46 AM
Last Updated : 12 Apr 2025 06:46 AM

திமுகவின் ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: அதிமுக - பாஜக கூட்டணி தேர்தல் வியூகத்தை விவரித்த அமித் ஷா

சென்னை: ‘‘அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை சந்​திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்று சென்​னை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அறி​வித்​துள்​ளார்.

2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி, தமிழகத்தில் கூட்​டணி குறித்து ஆலோ​சனை நடத்தி முக்​கிய முடிவு​களை அறிவிக்​கும் வித​மாக, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா 2 நாள் பயண​மாக நேற்று முன்​தினம் சென்னை வந்​தார். டெல்​லி​யில் இருந்து புறப்​பட்டு இரவு 11.20 மணிக்கு சென்னை விமான நிலை​யம் வந்த அவரை, தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை, மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், முன்​னாள் தலை​வர் பொன்​.​ரா​தாகிருஷ்ணன், நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோர் வரவேற்​றனர். பின்​னர், கிண்​டி​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் அமித் ஷா ஓய்​வெடுத்​தார்.

தமிழகத்​தில் கட்சி நில​வரம் குறித்து மூத்த தலை​வர்​கள், நிர்​வாகி​களு​டன் அமித் ஷா நேற்று காலை ஆலோ​சனை நடத்​தி​னார். பின்​னர், மயி​லாப்​பூரில் உள்ள ‘துக்​ளக்’ ஆசிரியர் ஆடிட்​டர் குரு​மூர்த்​தி​யின் வீட்​டுக்கு சென்​றார். அங்கு இரு​வரும் 2 மணி நேரம் ஆலோ​சனை நடத்தினர்.

ஊழலை முன்னிறுத்தி பிரச்சாரம்: 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுகவை தோற்​கடிக்க வலு​வான கூட்​ட​ணியை அமைப்​பது, பாஜக​வின் தேர்​தல் வியூ​கம், அதி​முக உடனான கூட்​டணி உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து இரு​வரும் தீவிர​மாக ஆலோ​சித்​தனர். அதி​முக​வில் உள்ள கருத்து வேறு​பாடு​களை நீக்​கி, கட்​சியை ஒருங்​கிணைத்து வலுப்​படுத்தி தேர்​தலை சந்​திக்க வேண்​டும் என குரு​மூர்த்திதெரி​வித்​த​தாக கூறப்​படு​கிறது.

திமுக​வின் ஊழல், மோசடிகள், மாநில சட்​டம் - ஒழுங்கு சீர்​குலைவு ஆகிய​வற்றை முன்​னிறுத்தி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் ஈடு​படு​வது குறித்​தும் ஆலோ​சித்​தனர். பின்​னர், குரு​மூர்த்​தி​யின் வீட்டில் இருந்​து,அதி​முக பொதுச் செயலா​ளர் பழனி​சாமியுடன் தொலை பேசி​யில் அமித் ஷா பேசி​ய​தாக தெரி​கிறது.

குறைந்தபட்ச செயல் திட்டம்: இதையடுத்​து, கிண்டி நட்​சத்​திர ஓட்​டலில் அமித் ஷாவை, பழனி​சாமி சந்​தித்து, கூட்​டணி தொடர்​பாக முக்​கிய ஆலோசனை நடத்தினார். குறிப்​பாக, அதி​முக தலை​மை​யில் தேர்​தலை சந்​திப்​பது, கூட்​டணி ஆட்சி அமைப்​பது, குறைந்​த​பட்ச செயல்​திட்​டங்​களை நிறைவேற்​று​வது குறித்து ஆலோ​சித்​தனர்.

இதைத் தொடர்ந்​து, அதி​முக தலை​மை​யில் பாஜக – அதி​முக கூட்​டணிஉறு​தி​யானதை, செய்​தி​யாளர்​கள் முன்​னிலை​யில் அமித் ஷா அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். ‘‘பாஜக, அதி​முக தலை​வர்​கள் இணைந்து கூட்​ட​ணியை உரு​வாக்கி உள்​ளோம். அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் 2026 பேரவை தேர்​தலை சந்​திக்க உள்​ளோம். பாஜக​வும், அதி​முக​வும் இணைந்து தமிழகத்​தில் கூட்​டணி ஆட்சி அமைக்​கும்’’ என்​று அவர் கூறினார்.

இபிஎஸ் வீட்டில் தேநீர் விருந்து: பின்​னர், பழனிசாமி அழைப்பை ஏற்று, அவரது வீட்டில் நடைபெற்றதேநீர் விருந்​தில் அமித் ஷா கலந்துகொண்டார். அண்​ணா​மலை, எல்.​முரு​கன், நயி​னார் நாகேந்​திரன் உள்​ளிட்​டோரும் உடன் சென்​றனர். அங்கு பழனி​சாமி​, அமித் ஷா ஒரு மணிநேரம் ஆலோ​சனை நடத்​தினர். நேற்று இரவே அமித் ஷா டெல்லி புறப்பட்டு சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x