Published : 09 Apr 2025 06:09 AM
Last Updated : 09 Apr 2025 06:09 AM

டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு மீது நீதிபதிகள் அதிருப்தி - வழக்கின் முழு பின்னணி!

சென்னை: ​டாஸ்​மாக் அலு​வல​கத்​தில் அமலாக்​கத்​துறை நடத்​திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்​கில், திடீரென உச்ச நீதி​மன்​றத்தை நாடியது ஏன் என்​றும், அதை முன்​கூட்​டியே தெரி​வித்து இருந்​தால் இந்த வழக்கை நாங்​கள் விசா​ரணைக்கு ஏற்று இருக்க மாட்​டோம் என்​றும், இது எங்​களை அவமானப்​படுத்​து​வது போல் உள்​ளது என்றும் நீதிப​தி​கள் அதிருப்தி தெரி​வித்​தனர்.

சென்​னை​யில் உள்ள டாஸ்​மாக் தலைமை அலு​வல​கத்​தில் கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை அமலாக்​கத்​ துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யின் அடிப்​படை​யில் டாஸ்​மாக்​கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக அமலாக்​கத்​ துறை அறிக்கை வெளி​யிட்​டது.

இந்​நிலை​யில், அமலாக்​கத்துறை​யின் சோதனை சட்​ட​விரோத​மானது என அறிவிக்​கக் கோரி​யும், அதி​காரி​களை விசா​ரணை என்ற பெயரில் துன்​புறுத்​தக்​கூ​டாது என கோரி​யும் தமிழக அரசு மற்​றும் டாஸ்​மாக் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் தொடரப்​பட்​டன.

இந்த வழக்கை முதலில் விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​. ரமேஷ், என்​.செந்​தில்​கு​மார் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, மேல்​வி​சா​ரணைக்கு தடை விதித்து வழக்கு விசா​ரணை​யில் இருந்து வில​கினர். அதையடுத்து இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​. சுப்​ரமணி​யம், கே.​ராஜசேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்து வரு​கிறது.

அவமானப்படுத்தும் செயல்: இதனிடையே, இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றம் விசா​ரிக்​கக்​கூ​டாது என கோரி தமிழக அரசு சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதி​மன்​றமே விசா​ரிக்​கட்​டும் என தெரி​வித்து தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்க மறுத்​தது. இந்​நிலை​யில், இந்த வழக்கு உயர் நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், கே.​ராஜ சேகர் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது நீதிப​தி​கள், தமிழக அரசு தரப்பு வழக்​கறிஞரிடம், “இந்த வழக்​கில் திடீரென உச்ச நீதி​மன்​றத்தை நாடியது ஏன்? அதை முன்​கூட்​டியே தெரி​வித்து இருந்​தால் இந்த வழக்கை நாங்​கள் விசா​ரணைக்கு ஏற்று இருக்க மாட்​டோம். இது எங்​களை அவமானப்​படுத்​து​வது போல் உள்​ளது. இந்த வழக்கு அதி​காரி​களை காப்​பாற்​றும் நோக்​கில் தொடரப்​பட்​டுள்​ளதா அல்​லது பொது​மக்​கள் நலன் சார்ந்​த​தா” என அதிருப்தி தெரி​வித்து விசா​ரணையை பிற்​பகலுக்கு தள்ளி வைத்​தனர்.

பிற்​பகலில் வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​த​போது டாஸ்​மாக் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் விக்​ரம் சவுத்​ரி, “டாஸ்​மாக்​கில் தவறு நடந்​துள்​ளது என்​பதை நம்​புவதற்​கான காரணங்​கள் இருந்​தால் மட்​டுமே நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த விவ​காரத்​தில் அது​போல எது​வும் இல்​லை, சோதனை என்ற பெயரில் அரசு அதி​காரி​களைத்​தான் துன்​புறுத்​தி​யுள்​ளனர். விதி​களை பின்​பற்​ற​வில்லை எனில் நீதி​மன்​றம் தலை​யிடலாம்” என வாதிட்​டார்.

அப்​போது, அமலாக்​கத்​ துறை தரப்​பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ரமேஷ், “இந்த வழக்கை முதலில் விசா​ரித்த நீதிப​தி​கள், மேற்​கொண்டு நடவடிக்கை எடுக்க தடை விதித்து வாய்​மொழி​யாக உத்​தரவு பிறப்​பித்​தனர். அந்த உத்​தரவு தற்​போதும் தொடர்​கிற​தா” என்​றார். அதற்கு நீதிப​தி​கள், அது​போன்ற எந்த உத்​தர​வை​யும் இந்த அமர்வு பிறப்​பிக்​க​வில்லை என்​றும், எழுத்​துப்​பூர்​வ​மான உத்​தரவை மட்​டுமே நீதி​மன்​றம் பின்​பற்​றும் என்​றும் தெரி​வித்​தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரி​வித்த அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன், “மேற்​கொண்டு எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​ மாட்​டோம் என அமலாக்​கத்​ துறை ஏற்​கெனவே உறு​தி​யளித்​தது. அதன்​காரண​மாகவே அந்த அமர்​வு, வாய்​மொழி​யாக உத்​தரவு பிறப்​பித்​தது. தற்​போது அமலாக்​கத்​துறை தனது நிலைப்​பாட்டை மாற்​றக்​கூ​டாது” என்​றார்​. அதையடுத்​து நீதிப​தி​கள்​ இந்​த வழக்​கை இன்​றைக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x