Published : 01 Apr 2025 05:12 PM
Last Updated : 01 Apr 2025 05:12 PM

ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு 2-வது முறையாக காவல் நீட்டிப்பு

ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற கென்னடி என்பவருக்குச் விசைப்படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மார்ச் 19-ல் சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த சங்கர், அர்ஜுனன், தர்ம முனியாண்டி ஆகிய 3 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் செவ்வாய்கிழமையோடு நிறைவடைந்ததை தொடர்ந்து 3 மீனவர்களும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நளினி சுபாஸ்கரன் ஏப்ரல் 9 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, 3 மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x