Published : 22 Jul 2018 10:12 AM
Last Updated : 22 Jul 2018 10:12 AM

2019 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட வேண்டும்: மாவட்ட நிர்வாகிகள், மாநில குழுவிடம் வலியுறுத்தல்

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டு மென தேமுதிக மாநில குழுவிடம் மாவட்ட நிர்வாகிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் பணியை மேற்கொள்ள தேமுதிகவில் பல்வேறு புதிய தேர்தல் பணிகளை கையில் எடுத்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெற அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று திரும்ப உள்ளார்.

இதற்கிடையே, வரும் நாடாளு மன்றத் தேர்தலை முன்னிட்டு மாவட்டங்கள் தோறும் சென்று அங்குள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகளை சந்தித்து பேச 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில், தேமுதிக அவைத் தலைவர் ஆர்.மோகன்ராஜ், பொருளாளர் டாக்டர் வி.இளங்கோவன், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர், பேராசிரியர் எஸ்.சந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில், இந்தக் குழுவினர் முதல்கட்டமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்

குடியில் உள்ள மாவட்ட  செயலாளர்கள், ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளுடன் ஆய்வு நடத்தியுள்ளனர். கட்சியை வலுப்படுத்துதல், அதிக உறுப்பினர்கள் சேர்த்தல், புதிய நிர்வாகிகள் நியமித்தல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றுவது உள்ளிட்டவை குறித்து விரிவாக பேசியுள்ளனர்.

இதுதொடர்பாக தேமுதிகவின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியை நாங்கள் தொடங்கிவிட்டோம். மாவட்டங்கள் தோறும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுது, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்து விரிவாக பேசி வருகிறோம். பெரும்பாலான நிர்வாகிகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென ஆர்வம் தெரிவிக்கின்றனர். இதுபோல், அனைத்து மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளையும் கேட்டு, இறுதியில் அறிக்கையாக தயாரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் வழங்குவோம். அதன்பிறகு, அவர் இறுதி முடிவை அறிவிப்பார். மேலும், விஜயகாந்த் பிறந்த நாளில் (ஆக.25-ல்) நலத்திட்ட உதவிகள் வழங்குதல், திருப்பூரில் நடக்கவுள்ள மாநாட்டுக்கு தொண்டர்களை திரட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளதால், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக் கும் வரும் டிசம்பருக்குள் வாக்குச்சாவடி குழு அமைத்து, அதன் பட்டியலை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் இதற்கான பணிகள் தொடங்கி விட்டன’’ என்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அவருடன் பிரேமலதா விஜயகாந்த், மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் சென்றனர். தற்போது, அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவனையில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வருகிறார்.

அடுத்த 3 நாட்களுக்கு மருத் துவ சிகிச்சையை தொடங்க வுள்ளனர். இருப்பினும், ஓய்வு நேரங்களில் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கட்சி மூத்த நிர்வாகிகளிடம் பேசி வருகிறார். இதேபோல், தமிழக அரசியல் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொள்கிறார் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x