Published : 01 Apr 2025 07:55 AM
Last Updated : 01 Apr 2025 07:55 AM
திருவாரூர்: திருவாரூரில் ஏப்.7-ம் தேதி நடைபெற உள்ள ஆழித் தேரோட் டத்துக்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கும், திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா, கடந்த மார்ச் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான பிரசித் திபெற்ற ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 7-ம் தேதி பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடை பெறவுள்ளது.
ஆசியாவிலேயே பெரிய தேர்: அலங்கரிக்கப்பட்ட நிலையில் 350 டன் எடை கொண்டதாகவும், 96 அடி உயரம் கொண்டதாகவும் உள்ள இந்த ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக விளங்குகிறது. இந்த தேரோட்டத்துக்காக தேர் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், தேரில் பொருத்தப்பட உள்ள பொம்மைகள், போர்த்தப் படவுள்ள திரைச்சீலைகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஆழித் தேரோட்டத்தையொட்டி, ஏப்.6-ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தியாகராஜ சுவாமி. அஜபா நடனத்துடன் ஆழித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். தொடர்ந்து 7-ம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து, காலை 9 மணி அளவில் ஆழித்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த தேரோட்ட நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளூர் விடுமுறை: இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் ஆகியோர் ஆழித் தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளையும், ஆழித்தேர் கட்டுமான பணிகளையும் நேற்று பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். தேரோட்டத்தையொட்டி ஏப்.7-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment