Published : 31 Mar 2025 11:43 AM
Last Updated : 31 Mar 2025 11:43 AM

‘மறக்கமுடியா தருணங்கள்...’ - கிபிலி பாணி ஏஐ ஓவியம் பகிர்ந்த இபிஎஸ்

சென்னை: காலத்தால் அழியாத கலை வடிவில் மறக்கமுடியா தருணங்களை உருவாக்கியுள்ளதாக கிபிலி பாணி ஓவியங்களைப் பகிர்ந்து சிலாகித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் நீக்கமற பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி வீட்டின் செல்லப் பிராணி படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர் நெட்டிசன்கள். ChatGPTயின் GPT 4o வெர்சன் ஏஐ ஜெனரேட்டர் இந்த கிபிலி பாணி படங்களை நொடிப் பொழுதில் ஜெனரேட் செய்து தருவதால் அது பலருக்கும் பொழுதுபோக்காக மாறியுள்ளது. இந்த அம்சத்தை பிரீமியம் செலுத்தியே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை முதலில் இருந்தது. ஆனால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கவே ஃப்ரீ யூஸர்ஸுக்கும் இந்த சேவையை நீட்டிதது ஓபன் ஏஐ.

முன்னதாக, செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய ஸ்டுடியோ கிப்லி பாணியிலான பிரதமர் மோடியின் படங்களை அரசு, சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தது. இது இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தமிழக அரசியல் வட்டாரத்தில் எடப்படி பழனிசாமி அந்த ட்ரெண்டை பின்பற்றியுள்ளார். ஸ்டூடியோ கிபிலி பாணியில் தனது அரசியல் பயணத்தில் சில தருணங்களை ஜெனரேட் செய்து எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

கூடவே, “தமிழகத்தின் இதயத்திலிருந்து ஸ்டூடியோ கிபிலி உலகத்துக்கு - எனது மறக்கமுடியாத தருணங்களை காலத்தால் அழியாத கலை வடிவில்’ என்று சிலகித்துப் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்தப் பதிவு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x