Published : 30 Mar 2025 03:27 PM
Last Updated : 30 Mar 2025 03:27 PM
சிங்காரச் சென்னை அட்டையில் 20 பரிவர்த்தனைக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும் என்ற விதியால் மாநகர பேருந்து பயணிகள் புலம்பி வருகின்றனர்.
மாநகர போக்குவரத்து கழகத்தின் அனைத்து பேருந்துகளிலும் கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் முறை அமலுக்கு வந்துவிட்டது. இதனால் சில்லறை பிரச்சினை என்பது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதம் முதல் என்சிஎம்சி எனப்படும் சிங்காரச் சென்னை அட்டை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப் படுத்தப்பட்டதால், மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் ஆகியவற்றில் அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பெறுவதில் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் பயண அட்டையில் இருக்கும் சிக்கல் தற்போது பயணிகளிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் சிங்காரச் சென்னை பயண அட்டை மூலம் பயணச்சீட்டு பெறுவோர், 20 பரிவர்த்தனைக்கு ஒரு முறை அப்டேட் செய்ய வேண்டும். அப்படி அப்டேட் செய்தால் மட்டுமே ரீசார்ஜ் செய்த தொகையை அறிய முடியும். இதனை மாநகர பேருந்து நடத்துநர்களே பயணத்தின் போது செய்து கொடுக் கிறார்கள். ஆனால், ரீசார்ஜ் செய்தவுடன் தொகை இருப்பு வைக்கப் பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய முடியாத தால் பயணிகள் தேவையற்ற குழப்பத்தில் சிக்குகின்றனர். எனினும், பாதுகாப்பு காரணங் களுக்காகவே இவ்வாறு அட்டையின் செயல் பாடு இருப்பதாக மாநகர போக்கு வரத்து அதிகாரிகள் விளக்க மளிக்கின்றனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது,"சிங்காரச் சென்னை பயண அட்டைக்கு எவ்வித பாதுகாப்பு வசதியும் கொடுக்கப்படவில்லை. டெபிட், கிரெடிட் கார்டு போன்று அதற்கென ரகசிய குறியீடு கிடையாது. அதை ஒரு டேப் செய்வதன் மூலம் பரிவர்த்தனை நிறைவடைந்து பயணச்சீட்டை பெற முடியும். இவ்வாறு இருக்க அட்டை தொலைந்து போகும் பட்சத்தில்
அதை பயன்படுத்துபவர்கள் 20 பரிவர்த்தனைக்கு மேல் அப்டேட் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் மூலம் பரிவர்த்தனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்டேட் என்பது எவ்வித கட்டணமுமின்றி, மெட்ரோ நிலையத்திலோ, மாநகர பேருந்துகளிலோ, என்சிஎம்சி கவுன்டர்களிலோ செய்து கொள்ள முடியும். இந்த அப்டேட் நடைமுறைக்கும் மாற்று ஏற்பாடுகளை கண்டறிந்து வருகிறோம். அதேநேரம், தற்போது ஏர்டெல் நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அட்டையில் அப்டேட் செய்ய வேண்டிய அவசிய மில்லை" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment