Published : 28 Mar 2025 06:19 AM
Last Updated : 28 Mar 2025 06:19 AM

‘அந்த தியாகி யார்?’ - திருச்சியில் சுவரொட்டி​யால் பரபரப்பு

திருச்சி: தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் அதி​முக சார்​பில் ஒட்​டப்​பட்​டுள்ள ‘அந்த தியாகி யார்?’ என்ற போஸ்​ட​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது. திருச்​சி, மயி​லாடு​துறை உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களில் அதி​முக சார்​பில் ‘அந்த தியாகி யார்?’ என்ற தலைப்​பில் சுவரொட்​டிகள் ஒட்​டப்​பட்​டுள்​ளன.

அதில், ‘டாஸ்​மாக் ஊழல்- பாட்​டிலுக்கு 10 ரூபாய், விற்​பனை​யில் ரூ.1,000 கோடி, உரிமம் வராத பார்​கள் மூலம் ரூ.40,000 கோடி ஊழலா? என மக்​கள் கேள்வி என்​றும், 1,000 ரூபாய் கொடுப்​பது போல கொடுத்து ரூ.1,000 கோடி அமுக்​கிய அந்த தியாகி யார்?’ என்​றும் கேள்வி எழுப்​பப்​பட்​டுள்​ளது.

அதி​முக சார்​பில் இரவோடு இரவாக ஒட்​டப்​பட்​டுள்ள இந்த சுவரொட்​டிகள் அரசி​யல் வட்​டாரத்​தில் பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x