Published : 28 Mar 2025 12:14 AM
Last Updated : 28 Mar 2025 12:14 AM

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் 4 பிரதிநிதிகள் பதவிநீக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: உசிலம்​பட்டி நகர்​மனறத் தலை​வர், சென்னை மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 2 பேர், தாம்​பரம் மாநக​ராட்சி கவுன்​சிலர் என 4 நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​களை பதவிநீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் நகர்ப்​புற உள்​ளாட்​சிகளான மாநக​ராட்​சிகள், நகராட்​சிகள், பேரூ​ராட்​சிகள் ஆகியவை 1998-ம் ஆண்டு தமிழ்​நாடு நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்​பு​கள் சட்​டத்​தின் கீழ் நிர்​வகிக்​கப்​படு​கிறது. இதன் விதி​களை மீறும் மேயர்​கள், துணை மேயர்​கள், மன்​றத் தலை​வர்​கள், துணைத் தலை​வர்​கள், மண்​டலக்​குழு தலை​வர்​கள், மன்ற உறு​ப்பினர்​கள் மீது நடவடிக்கை மேற்​கொள்ள அச்​சட்​டம் அதி​காரம் அளிக்​கிறது. இதன்​படி விதி​களை மீறி செயல்​பட்ட நகர்ப்​புற உள்​ளாட்சி அமைப்பு பிர​தி​நி​தி​கள் 4 பேரின் பதவி​களை நீக்​கம் செய்து அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

அதன்​படி சென்னை மாநக​ராட்​சி​யில் 5-வது வார்டு கவுன்​சிலர் கே.பி.சொக்​கலிங்​கம் (தி​முக), 189-வது வார்டு கவுன்​சிலர் வ.பாபு (தி​முக), தாம்​பரம் மாநக​ராட்சி 40-வது வார்டு கவுன்​சிலர் மற்​றும் 3-வது மண்​டலக்​குழு தலை​வர் ச.ஜெயபிரதீப், உசிலம்​பட்டி நகராட்​சி, 11-வது வார்டு கவுன்​சிலர் மற்​றும் நகர்​மன்ற தலை​வர் க.சகுந்​தலா ஆகியோர் பதவிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

பள்​ளிக்​கரணை பகு​தி​யில் 4800 வீடு​களுக்கு குடிநீர் இணைப்பு வழங்​கும் பணிக்கு இடையூறு செய்​த​தால் இது​வரை 180 இணைப்​பு​கள் மட்​டுமே கொடுக்​கப்​பட்​டுள்​ளன. இணைப்பு வழங்​கும் ஒப்​பந்​த​தா​ரர்​களை கவுன்​சிலர் பாபு மிரட்​டி, விரட்​டி​யுள்​ளார். பகுதி பொறி​யாளரை தாக்​கி​யுள்​ளார். குடிநீர் இணைப்பு சேவை இணை​யதள பாஸ்​வேர்டை கேட்​டும் மிரட்​டி​யுள்​ளார் என இவர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க மாநக​ராட்சி ஆணை​யர் அரசிடம் கோரி​யிருந்​தார்.

சென்னை மாநக​ராட்சி 5-வது வார்டு கவுன்​சிலர் கே.பி.சொக்​கலிங்​கம் சாலை அமைக்​கும் பணியை தடுத்து நிறுத்​தி​யுள்​ளார். மாநக​ராட்சி சார்​பில் செயல்​படுத்​தப்​படும் உட்​கட்​டமைப்பு பணி​கள் மற்​றும் வளர்ச்சி பணி​களை மேற்​கொள்ள இடையூறாக இருந்​துள்​ளார் என குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாநக​ராட்சி ஆணை​யர் அரசை கோரி​யிருந்​தார்.

உசிலம்​பட்டி நகரமன்ற தலை​வர்: உசிலம்​பட்டி நகரமன்ற தலை​வர் க.சகுந்​தலா, நகரமன்ற மாண்பை குறைக்​கும் வகை​யில், நகரமன்ற கூட்​டத்தை மன்ற கூடத்​தில் நடத்​தாமல், நகரமன்​றத் தலை​வர் அறை​யில் நடத்​தி​யுள்​ளார். அப்​போது மகன் மற்​றும் உறவினர்​கள் நகரமன்ற தலை​வர் அனு​ம​தி​யோடு கூட்ட அறை​யில் நின்று கொண்​டு, மன்ற உறுப்​பினர்​கள் கருத்து தெரிவிக்​கும்போது, அவர்​களு​டன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். விதி​களை மீறி திடக்​கழிவு மேலாண்மை தொடர்​பான தீர்​மானத்தை நிறைவேற்​றி​யுள்​ளார் என இவர் மீது குற்​றம்​சாட்​டப்​பட்​டது. அதனால் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்​வாக இயக்​குநர் அரசிடம் கோரி​யிருந்​தார்.

தாம்​பரம் மாநக​ராட்​சியில்.. தாம்​பரம் மாநக​ராட்​சி, 3-வது மண்​டலக்​குழு தலை​வர் ச.ஜெயபிரதீப், மன்ற உறுப்​பினர்​களை கலந்​தாலோ​சிக்​காமல் தன்​னிச்​சை​யாக செயல்​படு​வது, 8 மாதங்​களாக தொடர்ச்​சி​யாக எந்த கூட்​டத்தையும் கூட்​டா​மல் இருப்​பது உள்​ளிட்ட பல்​வேறு குற்​ற​ச்சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டது. அதனால் இவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்​வாக இயக்​குநர் அரசிடம் கோரி​யிருந்​தார். இந்த 4 பேரிடம் உரிய விளக்​கம் கோரப்​பட்​டது. அந்த விளக்​கங்​கள் திருப்தி அளிக்​காத நிலை​யில், இவர்​கள் மீதான குற்​றச்​சாட்டு உறுதி செய்​யப்​பட்​டதை தொடர்ந்​து, அரசு கவன​முடன்​ பரிசீலித்​து இவர்​களின்​ பதவி​களை நீக்​கி உத்​தரவிட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x