Published : 28 Mar 2025 12:10 AM
Last Updated : 28 Mar 2025 12:10 AM

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இபிஎஸ் தானாகவே விலகிக் கொள்வதே மரியாதை: ஓபிஎஸ் கருத்து

திருநெல்​வேலி / சென்னை: பழனி​சாமி தானாகவே அதி​முக பொதுச் செய​லா​ளர் பதவியி​லிருந்து வில​கிக் கொள்​வது​தான் அவருக்கு மரி​யாதை என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் கூறி​னார்.

நெல்​லை​யில் நேற்று அதி​முக அமைப்​புச் செய​லா​ளர் கருப்​ப​சாமி பாண்​டியன் உடலுக்கு அஞ்​சலி செலுத்​திய ஓ.பன்​னீர்​செல்​வம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​கள் அனைத்​தை​யும் ஒருங்​கிணைக்க வேண்​டும் என்று கருப்​ப​சாமி பாண்​டியன் கரு​தி​னார். அதி​முக தொண்​டர்​களின் எண்​ண​மும் அது​தான். பிரிந்​திருக்​கும் அதி​முக ஒன்​றிணைவது அவசி​யம்” என்​றார்.

பின்​னர் நெல்​லை​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஓ.பன்​னீர்​செல்​வம், விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: பழனி​சாமி தலை​மையி​லானவர்​கள் தவறான பொதுக்​குழுவை கூட்டி இருந்​த​தால், நாங்​கள் அதி​முக தலைமை அலு​வல​கத்​துக்​குச் செல்​லலாம் என்று முடிவு செய்​தோம். தலைமை அலு​வல​கத்​துக்​கும், இந்​தி​யன் வங்​கிக்​கும் இடை​யில், 8 மாவட்ட செய​லா​ளர்​கள் எங்​களை வழிமறித்​து, தொடர்ந்து செல்ல விடா​மல் தடுத்​தனர். நாங்​கள் வந்த வாக​னத்தை தாக்​கி, ரகளை செய்​தனர். இது​தான் நடந்த உண்​மை.

அவர்​கள் எங்​களைத் தாக்​கியதுடன், அவர்​களாகவே தலைமை அலு​வல​கத்​துக்​குள் புகுந்​து, அடி​யாட்​களை வைத்​து, பொருட்​களைச் சேதப்​படுத்​தினர். ஆனால், பழியை எங்​கள் மீது போட்​டனர். இவை அனைத்​தும் காவல் துறை​யின் வீடியோ பதி​வில் உள்​ளது.

கட்​சி​யில் நான் மட்​டும் இணைய வேண்​டும் என்று கூற​வில்​லை. பிரிந்து கிடக்​கும் அதி​முக சக்​தி​கள் அனைத்​தும் ஒன்​றாக இணைய வேண்​டும் என்​று​தான் தெரி​வித்​தேன். அவ்​வாறு இணைந்​தால்​தான், தேர்​தலில் வெற்றி பெற முடி​யும். இதை நான் திரும்​பத் திரும்ப கூறிவரு​கிறேன்.

ஆனால், அதி​முக எந்​தக் காலத்​தி​லும் வெற்றி பெறக்​கூ​டாது என்ற நோக்​குடன் பழனி​சாமி தரப்​பினர் செயல்​பட்டுக் கொண்​டிருக்​கின்​றனர். ஒற்​றைத் தலைமை வந்​தால் அனைத்து தேர்​தல்​களி​லும் வெற்றி பெறு​வேன் என்று பழனி​சாமி கூறி​னார். ஆனால், அவர் தலை​மைக்கு வந்த பின்​னர், ஒரு தேர்​தலில்​கூட வெற்றி பெற​வில்​லை. பழனி​சாமி அவராகவே பொதுச் செய​லா​ளர் பதவி​யில் இருந்து வில​கிக் கொள்​வது​தான் அவருக்கு மரி​யாதை. இல்​லை​யேல் அவர் அவமரி​யாதையை மட்​டுமே சந்​திப்​பார். இவ்​வாறு ஓ.பன்​னீர்​செல்​வம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x