Published : 27 Mar 2025 06:23 AM
Last Updated : 27 Mar 2025 06:23 AM
சென்னையில் விரைவில் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் வங்கியின் நிதியுதவியின் கீழ் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மொத்த ஒப்பந்த முறையில் (ஜிசிசி) மின்சார பேருந்துகளை இயக்கும் வகையில் டெண்டர் விடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக ஏசி, குளிர்சாதன வசதியில்லா பேருந்து என 625 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை உட்பட 35 இருக்கைகள் இருக்கும்.
இந்த பேருந்துகளுக்கான மின்னேற்றம் உள்ளிட்ட வசதிகளுக்காக அடையாறு, அயனாவரம் உள்ளிட்ட 5 பணிமனைகள் நவீனப்படுத்தப்பட்டு வருகின்றன. ஓட்டுநர் மற்றும் பராமரிப்புப் பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கவனித்துக் கொள்ளும். மாநகர போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த நடத்துநர் மட்டும் பேருந்தில் பணியில் இருப்பார்.
அமைச்சர் ஏற்கெனவே கூறியபடி, பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும். தாழ்தளப் பேருந்துகளாக இருப்பதால் முதியோர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பேருந்துகள் தற்போது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஆய்வில் இருக்கிறது. ஒப்புதல் வழங்கியவுடன் மே மாதம் முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment