Published : 26 Mar 2025 06:37 AM
Last Updated : 26 Mar 2025 06:37 AM
சென்னை: காரணமாக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோல, வரும் 31-ம் தேதி சென்னைக்கும் இதர ஊர்களுக்கு 890 சிறப்பு பேருந்துகள்இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூருக்கு வரும் 28-ல் 100 சிறப்பு பேருந்துகளும், வரும் 29-ல் 95 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மாதவரத்தில் இருந்து வரும் 28 மற்றும் 29-ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். 31-ம் தேதி சொந்த ஊர்களில் இருந்து திரும்ப வசதியாக அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment