Published : 26 Mar 2025 12:58 AM
Last Updated : 26 Mar 2025 12:58 AM

நடிகர் மனோஜ் பாரதிராஜா திடீர் மரணம்: தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்

சென்னை: இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனும் நடிகரு​மான மனோஜ் பார​தி​ராஜா மாரடைப்பு காரண​மாக நேற்று உயி​ரிழந்​தார். அவருக்கு வயது 48.

இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகன் மனோஜ் பார​தி​ராஜா. அமெரிக்​கா​வின் தெற்கு புளோரி​டா​வில் உள்ள பல்​கலைக் கழகத்​தில் நாடகக்​கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளி​யான 'தாஜ் மஹால்' திரைப்​படம் மூலம் கதா​நாயக​னாக அறி​முக​மா​னார். இந்​தப் படத்தை பார​தி​ராஜா இயக்​கி​னார். இதைத் தொடர்ந்​து, கடல் பூக்​கள், வருஷமெல்​லாம் வசந்​தம், அல்லி அர்​ஜு​னா, ஈரநிலம், சமுத்​திரம், அன்​னக்​கொடி என பல படங்​களில் நடித்​தார். கடைசி​யாக விரு​மன் என்ற படத்​தில் நடித்​திருந்​தார்.

'சாதுரியன்' என்ற படத்​தில் நடிக்​கும்​போது, அதில் நாயகி​யாக நடித்த மலை​யாள நடிகை நந்​த​னாவை காதலித்த மனோஜ் பார​தி​ராஜா, பெற்​றோர் சம்​மதத்​துடன் அவரை 2006-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார். இவர்​களுக்கு மதிவதனி, அர்த்​திகா என்ற 2 பெண் குழந்​தைகள் உள்​ளன. இயக்​குந​ராக வேண்​டும் என்ற ஆசை​யில் இருந்த அவர், இயக்​குநர் மணிரத்​னத்​திடம் உதவி இயக்​குந​ராக பணி​யாற்​றி​னார். பின்​னர், 2023-ல் 'கார்த்​திகை
திங்​கள்' என்ற படத்தை இயக்​கி​னார். இதில் பார​தி​ராஜா​வும் நடித்​திருந்​தார்.

தொடர்ந்து குணசித்​திர வேடங்​களில் நடித்து வந்த மனோஜுக்கு கடந்த சில நாட்​களுக்கு முன் இருதய பிரச்​சினை ஏற்​பட்​டது. இதனால் சென்னை தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றில் அவருக்கு இருதய அறு​வைச் சிகிச்சை செய்​யப்​பட்​டது. இதையடுத்து வீட்​டில் ஓய்​வெடுத்து வந்​தார். இந்​நிலை​யில், மாரடைப்​புக் காரண​மாக நேற்று அவர் திடீரென மரணமடைந்​தார். அவர் மரணம் திரை​யுல​கில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அவரது உடல், சென்னை சேத்​துபட்டு ஹாரிங்​டன் சாலை​யில் உள்ள அவரது வீட்​டில் வைக்​கப்​பட்​டுள்​ளது. உடலுக்கு உறவினர்​கள், திரை​யுல​கினர் அஞ்​சலி செலுத்தி வரு​கின்​றனர். மனோஜ் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்​து, அவர் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில், ‘நடிகரும் இயக்​குநர் பார​தி​ராஜா​வின் மகனு​மான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிக​வும் வருத்​த​முற்​றேன். தனது தந்​தை​யின் இயக்​கத்​தில் தாஜ்ம​ஹால் திரைப்​படம் மூலம் அறி​முக​மாகி, சமுத்​திரம், அல்லி அர்​ஜு​னா, வருஷமெல்​லாம் வசந்​தம் எனத் தொடர்ந்து பல திரைப்​படங்​களில் நடித்து தனக்​கென அடை​யாளத்தை உரு​வாக்​கிக் கொண்​ட​வர் மனோஜ். இளம்​வய​தில் அவர் எதிர்​பா​ராத​வித​மாக மறைந்​து​விட்​டது மிகுந்த அதிர்ச்​சி​யளிக்​கிறது. அன்பு மகனை இழந்து வாடும் இயக்​குநர் இமயம் பார​தி​ராஜாவுக்​கும், அவரது குடும்​பத்​தினருக்​கும், திரைத்​துறையைச் சேர்ந்த நண்​பர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கலை​யும் ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா வெளி​யிட்ட இரங்​கல் வீடியோ பதி​வில் மனோஜ் இறந்து விட்​டார் என்​பதை நம்​ப​முடிய​வில்லை என்​றும் துயரத்தை தாங்​கும் மனவலிமையை பார​தி​ராஜாவுக்கு இறைவன் வழங்​கட்​டும் என இரங்​கல் தெரி​வித்​துள்​ளார்.

இது​போல, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை, பாஜக தலை​வர் அண்​ணா​மலை, த​மாகா தலை​வர் ஜி.கே.​வாசன், நடிகர்​கள் சரத்​கு​மார், கார்த்​தி, இயக்​குநர்​கள் ஆர்​.கே.செல்​வ​மணி, ராஜ்கபூர் உள்​ளிட்​ட பலரும்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x