Published : 25 Mar 2025 04:29 PM
Last Updated : 25 Mar 2025 04:29 PM

நெல்லை டிஐஜி உள்பட தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராமநாதபுரம் டிஐஜி அபிநவ் குமார், மதுரை டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி டிஐஜி பா.மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி ஆணையர் சந்தோஷ் ஹதிமானிக்கு திருநெல்வேலி டிஐஜி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வண்ணாரப்பேட்டை இணை ஆணையர் ஆர்.சக்திவேல் உளவுத்துறை- பிரிவு -1 இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையர் வி.பாஸ்கரன் வண்ணாரப்பேட்டை இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையர் மேகலினா இடென் சென்னை கிழக்கு போக்குவரத்துப் பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூர் இணை ஆணையர் டி.என்.ஹரி கிரண் பிரசாத் காவல்துறை நலப்பிரிவு இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கமாண்டோ சிறப்புப் படை எஸ்.பி. வி.கார்த்திக், மயிலாப்பூர் இணை ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு எஸ்.பி. ஜி.ஜவகர், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு சரக சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் ஏ.சுஜாதா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x