Published : 25 Mar 2025 06:07 AM
Last Updated : 25 Mar 2025 06:07 AM
மீனம்பாக்கம்: சைக்கிள் பேரணி மேற்கொள்ளும் படை வீரர்களை வரவேற்று மெரினாவில் கடலோர பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தப்படும் என்று சிஐஎஸ்எஃப் டிஐஜிக்கள் அருண் சிங், சிவக்குமார் தெரிவித்துள்ளனர்.
சிஐஎஸ்எஃப் என அழைக்கப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், ‘பாதுகாப்பான கடற்கரைகள்வளமான பாரதம்’ என்னும் தலைப்பில் கடலோர சைக்ளோத்தான் எனும் சைக்கிள் பேரணியை கடந்த 7-ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் ராஜாத்திய சோழன் மண்டல பயிற்சி மையத்திலிருந்து தொடங்கினர். இந்த பேர ணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
11 மாநிலங்கள் வழியாக.. மேற்கு கடற்கரை தடத்தில் குஜராத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும், கிழக்கு கடற்கரை தடத்தில் மேற்கு வங்கத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் 11 மாநிலங்கள் வழியாக மேற்கொள்ள உள்ள இந்த சைக்ளோத்தானில் 14 பெண்கள் உட்பட 125 மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டு கடற்கரையை ஒட்டிய பாதையிலேயே 6,553 கிலோமீட்டர் 25 நாட்கள் பயணிக்கின்றனர்.
மீனவர்களுடன் இணைந்து: இந்நிலையில் மேற்குவங்கம் மாநில கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை குழுவினர் நேற்று இரவு சென்னை வந்துடைந்தனர். அவர்களுக்கு இன்று சென்னை மெரினா கடற்கரையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு மாலை 5.30 மணிக்கு மெரினா கடற்கரையில் கடற்கரை பாதுகாப்பு குறித்து மீனவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மத்திய தொழில் பாதுகாப்பு பணியாளர் நடத்த உள்ளனர்.
சென்னை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜிக்கள் அருண் சிங், சிவக்குமார் கூட்டாக மீனம்பாக்கம் மத்திய தொழில் பாதுகாப்பு படை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மெரினாவில் நடைபெற உள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விவரித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment