Published : 25 Mar 2025 06:18 AM
Last Updated : 25 Mar 2025 06:18 AM

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு குழு கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? - பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி விளக்கம்

சென்னை: மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 22-ம் தேதி நடந்​தது. இதில், கேரளா, தெலங்​கா​னா, பஞ்​சாப் முதல்​வர்​கள், கர்​நாடகா துணை முதல்​வர் உட்பட மொத்​தம் 6 மாநிலங்​களில் இருந்து 14 அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்கேற்​றனர்.

இந்த கூட்​டத்​தில் ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாணின் ஜனசேனா கட்​சி​யும் கலந்து கொண்​ட​தாக கூறப்​பட்ட நிலையில், அதற்கு அந்த கட்சி மறுப்பு தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக ஜனசேனா கட்சி தலை​வரின் அரசி​யல் செயலர் பி.ஹரிபிர​சாத் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தொகுதி மறு​வரையறைக்கு எதி​ராக சென்​னை​யில் திமுக நடத்​திய அனைத்து கட்சி கூட்​டத்​தில் பங்​கேற்​கு​மாறு ஜனசேனா கட்​சிக்கு அழைப்பு வந்​தது. இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க வேண்​டும் என்று திமுக சார்​பில் பிர​தி​நி​தி​கள் நேரில் வந்து அழைப்பு விடுத்​தனர்.

எனினும், வெவ்​வேறு கூட்​ட​ணி​களாக இருப்​ப​தால், இந்த கூட்​டத்​தில் பங்​கேற்க இயல​வில்லை என கண்​ணி​யத்​துடன் தெரிவிக்க வேண்​டும் என எங்​கள் கட்சி தலை​வர் பவன் கல்​யாண் வழி​காட்​டி​னார். அதன்​படியே, இக்​கூட்​டத்​தில் கலந்​து​கொள்ள முடி​யாது என்று தெரி​வித்​து​விட்​டோம்.

இக்​கூட்​டத்​தில் ஜனசேனா கலந்து கொண்​ட​தாக வெளி​யான செய்​தி​கள் வெறும் ஊகங்​களே. தொகுதி மறு​வரையறை​யில் அவர்களுக்கு கருத்​துகள் இருப்​பது​போல​வே, எங்​களுக்கு கொள்கை உள்​ளது. இந்த விஷ​யத்​தில் எங்​கள் கொள்​கையை அதி​காரப்​பூர்​வ​மான மேடை​யில் வெளிப்​படுத்​து​வோம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x