Published : 25 Mar 2025 04:32 AM
Last Updated : 25 Mar 2025 04:32 AM
சென்னை: சவுக்கு சங்கர் வீட்டின் மீது கழிவு நீரை கொட்டி தாக்குதல் நடத்தப் பட்டதற்கு அரசியல் கட்சி தலை வர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
பிரபலயூடியூபர் சவுக்கு சங்கர், 'கழிவுநீர் அகற்று சேவை வாகனங் கள் ஒப்பந்தம்' தொடர்பாக விமர் சனம் செய்திருந்தார். இதை யடுத்து, சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டின்முன்பு நேற்று காலை திரண்டனர். திடீரெனஅவர் கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர். வீட்டுக்குள் கழிவுநீரையும் ஊற்றி னர். மேலும், சவுக்கு சங்கரின்தாயா ருக்கு கொலை மிரட்டலும் விடுத் தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் வருமாறு:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் அவரது தாயார் தனியாக இருந்தபோது. 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத் துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல்அறை, சமையல்பொருட் கள் என்று அனைத்துப் பொருட் களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்துக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை யுள்ள யாரும் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண் டிய ஒரு சம்பவமாகும். இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: திமுக ஆட்சி யின் ஊழலையும், சட்டம் ஒழுங் கைக் காப்பாற்ற முடியாத கையா லாகாத்தனத்தையும் குறித்து பேசு பவர்கள் மீது வழக்கு தொடர்வது, நள்ளிரவில் காவல்துறையினரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது திமுக அரசு,
ஆட்சியாளர்களின் இந்த அராஜ கப் போக்கு தொடர்வது நல்ல தல்ல. இதன் பின்னணியில் இருப் பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:சவுக்கு சங்கர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த கும்பல், அவ ருக்கு கொலை மிரட்டல் விடுத்தி ருப்பது கடும் கண்டனத்துக் குரியது. தமிழகத்தில் இத்தகைய விபரீதங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக் கப்பட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்கர் இல்லத்தில் அரங்கேறியிருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரிகத் தின் உச்சமாகும்.
விசிக தலைவர் திருமாவளவன்: சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து, அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன் அங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட் டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது அநாகரி கத்தின் உச்சம். இதில் தொடர் புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்டுள்ள கோரத்தாக்கு தல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய செயல்பாடுகள் வெளிப்படையான ஜனநாயகப் படுகொலையாகும். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மனிதக் கழி வையும், சாக்கடையையும் கொட் டியது கண்டனத்துக்குரியது.
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த்: ஒருவரின் விமர்ச னம் ஏற்புடையதாக இல்லை யென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயது முதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த இழிவான செயலை செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...