Published : 23 Mar 2025 06:29 AM
Last Updated : 23 Mar 2025 06:29 AM
செல்போன் பார்த்தபடி அரசு குளிர்சாதன பேருந்தை இயக்கிய ஓட்டுநர் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கரூருக்கு நேற்று முன்தினம் இரவு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட குளிர்சாதன பேருந்து புறப்பட்டது. பேருந்தில் 20 பயணிகள் இருந்தனர்.
குளிர்சாதன பேருந்து என்பதால், நடத்துநர் கிடையாது. இப்பேருந்து ஓட்டுநர் எஸ்.சரவணன் என்பவர் திருச்சியில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கிவிட்டு, பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
திருச்சி மாவட்ட எல்லையான பேட்டைவாய்த்தலை அருகே வலது கையில் செல்போனை பிடித்துவாறு, யூடியூப் பார்த்தபடி, பேருந்தை தொடர்ந்து இயக்கினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் ஓட்டுநரை கண்டித்துள்ளனர்.
இதையடுத்து, மீண்டும் செல்போன் பார்த்தவாறு கரூர் காந்திகிராமம் வரை பேருந்தை இயக்கியுள்ளார்.
இதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து, ஓட்டுநர் அலட்சியமாக பேருந்தை இயக்குவதால், அச்சத்துடன் பயணிக்கிறோம் என சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கரூர் மண்டல பொது மேலாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தி, கரூர் பணிமனை 1-ஐ சேர்ந்த ஓட்டுநர் சரவணனை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment