Published : 22 Mar 2025 06:10 AM
Last Updated : 22 Mar 2025 06:10 AM

சென்னை மாநக​ராட்​சிக்கு தரவேண்​டிய ரூ.350 கோடியை மத்திய அரசு தர​வில்லை: மேயர் பிரியா குற்​றச்​சாட்டு

சென்னை: சென்னை மாநக​ராட்சி மாமன்​றத்தில் மார்ச் 19-ம் தேதி ரூ.8,405 கோடிக் கான பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டது. இதன் மீதான விவாதம் ரிப்​பன் மாளி​கை​யில் உள்ள மாமன்​றக் கூடத்​தில் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை​யில் நேற்று நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில், கவுன்​சிலர்​களுக்​கான வார்டு மேம்​பாட்டு நிதியை ரூ.50 லட்​சத்​திலிருந்து ரூ.60 லட்​ச​மாக உயர்த்தி அறிவிக்​கப்​பட்​டது உள்​ளிட்ட பல்​வேறு அறி​விப்​பு​களை பெரும்​பாலான கவுன்​சிலர்​கள் வரவேற்று பேசினர். பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்த் பேசும்​போது, சொத்து வரியை உயர்த்​தி​யும் பற்​றாக்​குறை பட்​ஜெட் போட்​டிருப்​ப​தாகத் தெரி​வித்​தார்.

அதற்கு பதில் அளித்த மேயர் பிரி​யா, “ஆண்​டு​தோறும் சொத்து வரி 6 சதவீதம் உயர்த்​தி​னால் நிதி வழங்​கு​வ​தாக மத்​திய அரசு தெரி​வித்​தது. ஆனால் ரூ.350 கோடி வழங்​க​வில்​லை. அதை பெற்​றுத்தர வேண்​டும்” என்​றார். இறு​தி​யில் பட்​ஜெட்​டுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

முதல்வர் மருந்தகம்: கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்​கப்​பட்டு இருந்த வார்டு உறுப்​பினர்​களுக்கு ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்டு வந்த பராமரிப்பு தொகை ரூ.10 லட்​சம் ஏப்​.1-ம் தேதி முதல் வழங்​கப்​படும் என மேயர் அறி​வித்​தார். மாநக​ராட்​சிக்கு சொந்​த​மான 65 இடங்​களில் முதல்​வர் மருந்​தகங்​களை டியுசிஎஸ் கூட்​டுறவு சங்​கம் மூலம் தொடங்க மாநக​ராட்சி அனு​மதி அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

தமிழகத்​தைச் சேர்ந்த பிரபல கிரிக்​கெட் வீரர் ரவிச்​சந்​திரன் அஷ்​வின், உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்​டர்​களில் ஒரு​வ​ராக அங்கீகரிக்​கப்​பட்​ட​வர். அவர் பெயரை சென்னை சாலை ஒன்​றுக்கு வைக்க மாநகராட்சி சார்பில் திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது.

அதன்​படி, கோடம்​பாக்​கம் மண்​டலம், 134-வது வார்​டு, ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெரு​வுக்கு ‘ரவிச்​சந்​திரன் அஸ்​வின் சாலை’ என பெயரிட, அரசின் அனு​மதி பெற்ற பின்​னர், மாநக​ராட்சி அனு​மதி அளித்​து தீர்​​மானம்​ நிறை வேற்​றி​யுள்​ளது. இக்​கூட்​டத்​தில்​ மொத்தம்​ 97 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x