Last Updated : 21 Mar, 2025 04:52 PM

 

Published : 21 Mar 2025 04:52 PM
Last Updated : 21 Mar 2025 04:52 PM

“சரியான சாட்சிகள் இல்லாததால்  90% வரையிலான குற்ற வழக்குகள் தள்ளுபடி” - சட்டப் பல்கலை. துணைவேந்தர் தகவல்

 திண்டிவனம் அருகே  தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது.

விழுப்புரம்: திண்டிவனம் அருகே உள்ள மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சரசுவதி சட்டக் கல்லூரியில் தேசிய நியாய சன்ஹிதாவின் சட்ட அம்சங்கள் மற்றும் இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கங்கள் குறித்த தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் சட்ட கல்லூரியின் முதல்வர் அசோக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார், அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் கௌரி இரமேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை கழக துணை வேந்தர் சந்தோஷ்குமார் பேசும்போது, ''இந்த தேசிய கருத்தரங்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட தலைப்பு மிகவும் அருமையானது.

இன்றைக்கு சட்ட வழக்குகளில் பலர் நியாயங்களை பெற்று வந்தாலும், குற்ற வழக்குகளில் இந்தியா முழுவதும் சரியான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் 70 முதல் 90 சதவீத வரையிலான குற்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர். இதற்கு காரணம் சாட்சியங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அம்சம்தான். எனவேதான் இந்த தேசிய நிய சன்ஹிதா சட்டம் பலருக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இதனால் நீதி என்பது அனைவரும் பொதுவாகவும் நியாயமாகவும் அமையப் பெறும்'' என்றார்.

இக்கருத்தரங்கில் சென்னை விஐடி சட்டக் கல்லுாரி பேராசிரியர் ராஜ வெங்கடேசன், பிரேமா, ராஜலட்சுமி, புதுவை சட்டக் கல்லுாரி குர்மிந்தர் கௌர், மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளை அறங்காவல் சிவப்பிரகாசம், கல்லூரி நிர்வாக அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x