Published : 10 Mar 2025 06:19 AM
Last Updated : 10 Mar 2025 06:19 AM
சென்னை: உலக கிளைக்கோமா வாரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31-ம் தேதி வரை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது. உலக கிளைக்கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. ‘எதிர்காலத்தை தெளிவாக காணுங்கள்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
கண் அழுத்த நோய் பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பார்வை திறன் குறைவதை தடுக்க முடியும். அலட்சியமாக இருந்தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31-ம் தேதி வரை இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண்ணுக்குள் அழுத்த பரிசோதனைகள், கண் நரம்பு மதிப்பாய்வுகள், பார்வைப்புல சோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. கண் அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள், லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும். இலவச மருத்துவ ஆலோசனை பெற விரும்புவோர் 95949 03774 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment