Published : 28 Feb 2025 07:32 AM
Last Updated : 28 Feb 2025 07:32 AM

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் மாவட்​டங்கள் மற்றும் தஞ்சாவூரில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்​தில் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறு​பாடு காரணமாக இன்று (பிப்​.28) கடலோர மாவட்​டங்​களில் பெரும்​பாலான இடங்​களி​லும், உள் மாவட்​டங்​களில் சில இடங்​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கன்னி​யாகுமரி, திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர், ராமநாத​புரம், புதுக்​கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் மற்றும் மதுரை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

நாளை தென் தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், வட தமிழகத்​தில் சில இடங்​களி​லும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கன்னி​யாகுமரி, திருநெல்​வேலி, தென்​காசி, தூத்​துக்​குடி, விருதுநகர் மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்​யக்​கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x