Published : 28 Feb 2025 07:21 AM
Last Updated : 28 Feb 2025 07:21 AM

ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன்: ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற பாமக, அமமுக வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்​தின் ஆழ்கடல் பகுதி​யில் ஹைட்ரோ கார்பன் எடுக்​கும் திட்​டத்​துக்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்​டும் என பாமக, அமமுக கட்சிகள் வலியுறுத்​தி​யுள்ளன.

இதுதொடர்பாக அவர்கள் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பாமக நிறு​வனர் ராமதாஸ்: தமிழகத்​தின் நிலப்​பகு​தி​களி​லும் கடல்​பரப்​பிலும் ஹைட்ரோ கார்பன் எடுப்​ப​தற்கான ஏல அறிவிப்புகள் ஏற்கெனவே விடுக்​கப்​பட்டு, தமிழக மக்களின் கடும் எதிர்ப்​புக்கு பின்னர் நிறுத்​தப்​பட்டன. இந்நிலை​யில், மத்திய பெட்​ரோலிய அமைச்​சகத்​தின், ஹைட்ரோ கார்பன் எடுப்​ப​தற்கான திறந்​தவெளி அனுமதி கொள்​கை​யின் 10-வது சுற்று ஏல அறிவிப்​பில், தென் தமிழகத்​தின் 9990.96 சதுர கி.மீ. ஆழ்கடல் பரப்பு இடம்​பெற்றுள்​ளது.

உயிரி பன்மய வளம்: தமிழகத்​தின் மிகவும் முக்கிய உயிரி பன்மய வளங்​களில் ஒன்றான மன்னார் வளைகுடா பகுதி​கள், பன்னாட்​டள​வில் முக்​கி​யத்துவம் வாய்ந்த ராம்​சார் தளமாக தகுதி பெற்று விளங்குகின்றன.

இப்பகு​தி​யில் இத்திட்டம் செயல்​படுத்​தப்​பட்​டால், தமிழகத்​தின் கடல்​வளம் கடுமையாக பாதிக்​கப்​படும். மீனவர்கள் வாழ்​வா​தாரம் பறிபோகும். எனவே, இந்த ஆபத்தான ஏல அறிவிப்பை மத்திய அரசு உடனடி​யாகக் கைவிட வேண்​டும்.

அமமுக பொதுச்​செய​லாளர் டிடிவி தினகரன்: மத்திய அரசின் பெட்​ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்​சகத்​தின் ஹைட்ரோ கார்பன் எடுப்பு கொள்​கை​யின் கீழ் வெளி​யிடப்​பட்​டுள்ள ஏல அறிவிப்​பில், தென் தமிழக ஆழ்கடலின் பகுதி​களும் இடம்​பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்​சியை ஏற்படுத்து​கின்றன. இத்திட்​டத்​தினால், கடல்​வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பை சந்திக்​கக்​கூடும். மீன்​வளம் குறை​யும்.

எனவே இத்திட்​டத்தை மத்திய அரசு ரத்து செய்​வதுடன், அதற்கான ஏல அறி​விப்​பை​யும் உடனடியாக ​திரும்​பப்பெற வேண்​டும் என வலியுறுத்துகிறேன். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x