Published : 27 Feb 2025 05:50 AM
Last Updated : 27 Feb 2025 05:50 AM
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் சார்பில், ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ என்ற வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் இன்று (27-ம் தேதி) நடைபெறுகிறது.
இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.
இந்த முகாம் சென்னை மாவட்டத்தில், ஸ்ரீசங்கர வித்யாஸ்ரமம் உயர்நிலைப் பள்ளி, எண்.1,சவுத் அவென்யூ, காமராஜ் நகர், திருவான்மியூர், சென்னை-41 என்ற முகவரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், ஸ்ரீராம் இண்டஸ்ட்ரீஸ், சர்வே எண்.107, 2-பி, 2-ஏ ஜிஎன்டி சாலை, பஞ்செட்டி கிராமம், பொன்னேரி தாலுக்கா, திருவள்ளூர்-601 204 என்ற முகவரியிலும் நடைபெறுகிறது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆர்க்கிட் பார்மா லிமிடெட், பிளாட் எண்.121-133, ஓ.எம்.ஆர். சிட்கோ எஸ்டேட், ஆலத்தூர், திருப்போரூர், செங்கல்பட்டு-603110 என்ற முகவரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்பியன் பார்மசூட்டிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட், பிளாட் எண் பி-5, சிப்காட் தொழிற்பூங்கா, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, காஞ்சிபுரம்-602 117 என்ற முகவரியிலும் நடைபெறுகிறது. வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 எம்.எச்.வார்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment