Published : 25 Feb 2025 06:41 AM
Last Updated : 25 Feb 2025 06:41 AM

அரசு உதவி மருத்துவர் பணியிடத்துக்கான தகுதி பட்டியலில் 400 மருத்துவர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு

சென்னை: தமிழகம் முழு​வதும் புதிதாக நியமிக்​கப்​பட​வுள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர்​களுக்கான தகுதி பட்டியலில் இருந்து 400 மருத்​துவர்களை நீக்​கியதை எதிர்த்து தொடரப்​பட்ட வழக்​கில், பணி நியமனம் வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்டுப்​பட்டது என உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது. தமிழகத்​தில் காலியாக உள்ள 2,642 அரசு உதவி மருத்​துவர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் கடந்த ஜன.5 அன்று தேர்வு நடத்​தி​யது.

அதன்படி தேர்வு முடிந்து தகுதியான மருத்​துவர்​களின் தகுதிப் பட்டியலை தேர்வு வாரியம் வெளி​யிட்​டது. அதன்​பிறகு இதில் 400 பேர் கடந்த 2024ஜூலை 15-க்கு முன்பாக மருத்துவக் கவுன்​சிலில் பதிவு செய்ய​வில்லை எனக்​கூறி தகுதிப்​பட்​டியலில் இருந்து அவர்​களின் பெயர்களை தேர்வு வாரியம் நீக்​கியது. இதை எதிர்த்து பாதிக்​கப்​பட்ட மருத்​துவர்கள் பிரியதர்​ஷினி, சாய் கணேஷ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

அதில், ‘‘கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதிக்கு முன்பாக தமிழ்​நாடு மருத்துவ கவுன்​சிலில் பதிவு செய்ய விண்​ணப்​பித்​திருந்​தோம். மருத்துவ பல்கலைக்​கழகம், சான்​றிதழ்கள் வழங்க காலதாமதம் செய்​த​தால் உரிய நேரத்​துக்​குள் நிரந்​தரப் பதிவு சான்​றிதழைப் பெற முடிய​வில்லை. இதற்கு பல்கலைக்​கழகம் தான் காரணம் என்ப​தால், எங்களுக்கான பணியிடங்களை ஒதுக்​கீடு செய்ய வேண்​டும்" எனக் கோரி​யிருந்​தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.​கார்த்தி​கேயன் முன்பாக விசா​ரணைக்கு வந்தது. அப்போது, மனுதா​ரர்கள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் எம்.வேல்​முரு​கன், சான்​றிதழ் சரிபார்ப்​புக்கு தமிழ்​நாடு மருத்​துவக் கவுன்​சில் பதிவு செய்திருந்​தால் போது​மானது எனக் கூறப்​பட்​டிருந்​தது. ஆனால் தற்போது நிரந்தர பதிவு இல்லை எனக்​கூறி இவர்களை நீக்கிவிட்​டதாக வாதிட்​டார்.

அதையடுத்து நீதிபதி, தமிழ்​நாடு மருத்துவ தேர்வு வாரியம் புதிதாக நியமிக்​க​வுள்ள அரசு உதவி மருத்​துவர்​களுக்கு வழங்​கும் பணி நியமன உத்தரவு இந்த வழக்​கின் இறுதி தீர்ப்​புக்கு கட்டுப்​பட்டது எனக்​கூறி, இதுதொடர்பாக மருத்துவ தேர்வு வாரி​யம் ப​திலளிக்க உத்​தர​விட்டு ​விசா​ரணையை நாளைக்கு (பிப்​.26) தள்​ளிவைத்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x