Published : 25 Feb 2025 05:53 AM
Last Updated : 25 Feb 2025 05:53 AM

பல ஏக்கர் நிலங்களை பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தும் சூழல்: விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை

காஞ்சிபுரம்: பரந்​தூர் வட்டார விவசா​யிகள் வாழ்​வாதார பாது​காப்​புக் குழு மற்றும் தமிழ்​நாடு விவசா​யிகள் சங்கம் சார்​பில் காஞ்​சிபுரத்​தில் பரந்​தூர் வட்டார விவசா​யிகள் நிலவுரிமை பாது​காப்பு மாநாடு நேற்று முன்​தினம் நடைபெற்​றது.

இந்த மாநாட்​டில் பங்கேற்று விவசாய சங்க மாநிலத் தலைவர் பெ.சண்​முகம் பேசி​யது: தமிழக அரசு 2021-ம் ஆண்டு அளித்த வாக்​குறு​திப்படி பரந்​தூர் பசுமை விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்​படுத்​தும் விவகாரத்​தில் விவசா​யிகளின் கருத்துகளை கேட்​க​வில்லை.

பரந்​தூர் விமான நிலையம் அமைக்க இனிவரும் காலங்​களில் கூடுதல் நிலங்களை கையகப்​படுத்த வேண்டிய நிலை வரும். அரசு கூறியபடி இந்தப் பிரச்​சினை 5 ஆயிரம் ஏக்கரில் தீராது. மேலும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்​படுத்​தினால் மட்டுமே இந்த விமான நிலையம் பயன்​பாட்டுக்கு வரும்.

இந்தத் திட்​டத்தை மத்திய, மாநில அரசுகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்​டும். குறைவான பாதிப்புள்ள பகுதி​களில் விமான நிலை​யத்தை அமைக்க வேண்​டும். தங்களுடைய நில உரிமையை பாது​காக்க போராடும் விவசா​யிகள் மீது வழக்​குகள் போட்டு அச்சுறுத்தக் கூடாது. வழக்​குகளை திரும்பப் பெற வேண்​டும். விமான நிலையம் அமைப்​ப​தற்கு தகுதியான இடமா என்று ஆய்வு செய்​வதற்காக போடப்​பட்ட மச்சேந்​திரன் குழு அறிக்கையை வெளியிட வேண்​டும் என்றார்.

இந்த மாநாட்டுக்கு சங்கத்​தின் மாநில துணைத் தலைவர் கே.நேரு தலைமை தாங்​கினார். ஓய்வு​பெற்ற சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி அரிபரந்​தாமன், நீரியல் நிபுணர் எஸ்.ஜனக​ராஜன், பூவுலகு நண்பர்கள் ஜி.சுந்​தர்​ராஜன் பங்கேற்​றனர். இந்தக் கூட்​டத்​தில், ‘பரந்​தூர் பசுமை விமான நிலை​யத்தை அமைக்க நிலத்தை கையகப்​படுத்​தும் முயற்​சி​யில் தமிழ்​நாடு அரசு ஈடுபட்​டால் தமிழ்​நாடு விவசா​யிகள் சங்கத்தினரும், பரந்​தூர் வட்டார ​விவசா​யிகளும் சேர்ந்து ஏப். 15-ம் தேதி சட்டப்​பேரவை கூட்​டத் தொடர் நடைபெறும் ​போது ​முற்றுகைப் ​போராட்​டத்தை நடத்து​வோம்’ என அறி​விக்கப்​பட்​டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x