Published : 22 Feb 2025 07:00 AM
Last Updated : 22 Feb 2025 07:00 AM

தமிழகத்தில் பிப். 27-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பு மற்றும் கடலோரப் பகுதியில் நிலவ வாய்ப்புள்ள காற்று சுழற்சி காரணமாக வரும் 27-ம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஓரிருஇடங்களில் லேசானது முதல்மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப். 21-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 36.2 டிகிரி, குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 18 டிகிரி செல்சியஸ் பதிவானது.இன்று முதல்வரும் 24-ம் தேதி வரை தமிழகம்,புதுச்சேரியில் வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரைவெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x