Last Updated : 28 Jul, 2018 10:06 AM

 

Published : 28 Jul 2018 10:06 AM
Last Updated : 28 Jul 2018 10:06 AM

நன்கொடை விவரங்களை தாக்கல் செய்யாமல் வருமான வரி விலக்கு சலுகையை அனுபவிக்கும் கட்சிகள்:  ஏடிஆர் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் 95 சதவீத கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் நன்கொடை விவரங்களைத் தாக்கல் செய்யா மல் வருமான வரி விலக்கு சலுகையை அனுபவித்து வந்தது அசோசியேஷன் ஆஃப் டெமாக்ரட்டிக் ரிஃபார்ம்ஸ் (ஏடிஆர்) அமைப்பின் ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கட்சி களின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த ஜூன் 20-ம் தேதி நிலவரப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த கட்சிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 64. இதில் 97 சதவீத கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெறா தவை.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டாலே வருமானவரி விலக்கு சலுகையை ஒரு கட்சி பெற முடியும். வருமான வரி சட்டப் பிரிவு 13(ஏ)-ன் கீழ் விதிக்கப்பட்டுள்ள  சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களுக்கு எப்படி வருமானம் கிடைத்தது, யார் நன்கொடை அளித்தார்கள் என்ற விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிந்துகொள்ள கணக்கு விவர புத்தகத்தைப் பராமரிக்க வேண்டும்.

நன்கொடையை ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே ரொக்கமாக பெற முடியும்.  இதற்கு அதிகமான நன்கொடையை காசோலைகள், மின்னணு பரிமாற்றம், தேர்தல் நிதி பத்தி ரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறலாம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு29(சி)-ன்படி ஒவ்வொரு நிதி ஆண்டி லும், ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் தனி நபரிடமிருந்தோ, தனியார் நிறுவனங் களிடமிருந்தோ நன்கொடை பெறப்பட்டால் அந்த விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யாவிட்டால் வருமான வரி விலக்கை பெற முடியாது.

ஆய்வறிக்கை வெளியீடு

இந்நிலையில், கடந்த 2013-14, 2014-15,2015-16-ம் ஆண்டுகளில் தேர்தல் ஆணையத் தில் பதிவு செய்த, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தாக்கல் செய்த நன்கொடை விவரங்

களை ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு (அசோசியேஷன் ஆஃப் டெமாக் ரட்டிக் ரிஃபார்ம்ஸ்) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 5 சதவீத கட்சிகள் மட்டுமே நன்கொடை விவரங்களைத் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல மாநில வாரியாக எடுத்துக் கொண்டால் இந்த 3 நிதி ஆண்டுகளிலும் ஹரியானா, உத்தரபிரதேசம், திரிபுரா, கர்நாடகம், பிஹார், அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எந்தவொரு அங்கீகரிக்கப் படாத கட்சியும் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை.

இதனால் சட்டவிரோத பணப் பரிவர்த் தனைக்காகவும் வருவானவரி விலக்கு பெறவும் மட்டுமே கட்சிப் பதிவை பயன்படுத்து கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.  இதைத் தவிர்க்க சில பரிந்துரைகளும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பரிந்துரைகள் என்ன?

எந்த தேர்தலிலும் போட்டியிடாத 150 கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து கடந்த 1999-ல் தேர்தல் ஆணையம் நீக்கியது. அதேபோல, எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத 255 கட்சிகள் கடந்த 2016-ல் நீக்கப்பட்டன.  இதுபோன்ற நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், 5 ஆண்டு களுக்கும் மேலாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகளைக் களைய முடியும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்களின் முழு விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடாமல் நன்கொடை விவரத்தை மட்டும் தாக்கல் செய்யும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் கணக்கு விவரங்களை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.

மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தாக்கல் செய்யும் நன்கொடை விவரங்களை அவ்வப்போது பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஏடிஆர் அறிக்கையில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை வரன்முறைப்படுத்தும் வகையில், ‘தேர்தல் நிதி பத்திரங்கள்’ என்ற புதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்ச கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, கட்சிகளுக்குத் தேர்தல் நிதி அளிக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் விற்பனை செய்யப்படும் தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கலாம். ஆனால், நன்கொடை அளித்த வர் யார் என்ற விவரம் இந்தப் பத்திரத்தில் இடம்பெற்றிருக்காது. பத்திரங்களில் வாங்கு

பவரின் பெயர் இல்லாததால் நன்கொடை யாரால் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தைக் வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடியாது. முதல் கட்டமாக கடந்த  மார்ச்சில் எஸ்பிஐ கிளைகளில் ரூ.222 கோடிக்கும், 2-வது  கட்டமாக கடந்த ஏப்ரலில் ரூ.114 கோடியே 9 லட்சத்துக்கும் நிதிப் பத்திரங்கள் விற்பனையாகின.

ஆதார் கட்டாயமில்லை

தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டத்துக்கு ஆதாரை கட்டாயமாக்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் மத்திய நிதி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக அகில இந்திய பொதுத்துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் தே.தாமஸ் பிராங்கோவிடம் கேட்டதற்கு, “தேர்தல் நிதிப் பத்திரங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை. கறுப்பு பணத்தை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக அளித்தால்கூட கண்டறிய முடியாத நிலை தான் உள்ளது. எனவே, யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x