Last Updated : 14 Feb, 2025 08:45 AM

 

Published : 14 Feb 2025 08:45 AM
Last Updated : 14 Feb 2025 08:45 AM

“செங்கோட்டையனுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை!” - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

“என்னை சோதிக்காதீர்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வேதனைக் குரல் எழுப்பி இருக்கும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியனிடம் செங்கோட்டையன் விவகாரம் குறித்து பேசினோம்.

செங்கோட்டையன் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறதே? - அண்ணன் செங்​கோட்​டையன் ஆதங்​கத்​தில் இருக்​கிறார், வருத்​தத்​தில் இருக்​கிறார், கோபத்​தில் இருக்​கிறார் என்ப​தற்​கெல்​லாம் அவரே நேற்று முன்​தினம் தெளிவாக பதில் கூறி விட்​டார். “இந்த இயக்கம் நன்றாக இருக்க வேண்​டும், வலுவாக இருக்க வேண்​டும் என்பது​தான் எனது எண்ணம்” என்று அவர் தெளி​வாகச் சொன்ன பிறகும் அதைப் பற்றி பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை.

என்னை சோதிக்காதீர்கள் என்கிறாரே... யாரைச் சொல்கிறார்? - என்னிட​மிருந்து எதையாவது வார்த்​தைகளை வாங்கி எதையாவது செய்​து​விடலாம் என்று நினைக்​காதீர்​கள், அப்படி​யெல்​லாம் என்னை சோதிக்​காதீர்கள் என்கிற அர்த்​தத்​தில் தான் அப்படிச் சொன்​னார்​.

விழா மேடையில் எம்ஜிஆர் ஜெயலலிதா படங்கள் இல்லையே என்று அவர் கேட்டது நியாயம் தானே? - தன்னிடம் அழைப்பு கொடுக்க வந்த விவசாய சங்க நிர்வாகிகளிடம் தானே அதை கூறி உள்ளார். அதை கட்சியில் பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை.

விழாவுக்கு செல்லாததற்கான காரணமே அதுதான் என்றல்லவா அவர் சொல்லி இருக்கிறார்? - அது விவசாய சங்க கூட்​டமைப்​பினர் நடத்திய விழா. அதில் புரட்​சித்தலை​வர், புரட்​சித்தலைவி படங்களை வைப்பது குறித்து முடி​வெடுக்க அவர்​களுக்கு உரிமை உண்டு. அதேசம​யம், அவர்​களின் படங்களை வைக்க வேண்​டும் என்பது சட்டம் இல்லை. அது கட்சி விழா அல்ல. அதனால் அவர்கள் படம் வைக்​காத​தால் கலந்து கொள்ள​வில்லை என்று சொன்னது விவசாய சங்கத்​தினரின் விழா​வைத் தானே தவிர கட்சி விழாவை அல்ல.

மறுநாள் நடந்த டெல்லி அதிமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கும் அவர் செல்லவில்லையே? - அவர் போகாததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்​கும். அவர் ஒரு பெரிய அரசி​யல்​வாதி. தினமும் பல நல்லது, கெட்​டதுகளில் கலந்து கொள்ள வேண்டி இருக்​கும். எனவே அவர் போகாததற்கு வேறு முக்கிய காரணங்கள் இருக்​கும். அதிருப்​தி​தான் காரணம் என்று சொல்​ல​முடி​யாது.

அண்ணன் செங்​கோட்​டையன் அதிமுக-​வின் மூத்த முதுபெரும் தலைவர். புரட்​சித்தலைவர் எம்ஜிஆர் அரி ஓம் என்று அரசி​யலுக்கு வந்த காலத்​தில் இருந்து இன்று வரை அதிமுக-​வில் தொடர்ந்து பயணிப்​பவர். அதனால் அவருக்கு யாரும் சொல்​லிக் கொடுக்க வேண்​டியதும் இல்லை; அவரைக் குறை சொல்​ல​வும் முடி​யாது.

அவரிடம் இருந்த தலைமை நிலைய செயலாளர் பதவியை எஸ்.பி. வேலுமணியிடம் கொடுத்தார் பழனிசாமி. அதிமுக கள ஆய்வு குழுவில் செங்கோட்டையனை சேர்க்கவில்லை. இதெல்லாம் அவரை புறக்கணிப்பதுபோல் இருக்கிறதே? - ஈரோடு மாவட்​டத்​தின் மொத்த பொறுப்​பாள​ருமே அவர்​தான். அதை கவனிக்கவே அவருக்கு நேரம் போதாது. நான் அதிமுக-​வில் கொள்கை பரப்புச் செயலா​ளராக இருந்​தேன். புரொட்​டோ​கால் படி ஐந்தாவது இடத்​தில் இருந்​தேன். ஆனால் அதற்​குப் பிறகு அம்மா என்னை பொறுப்​பில் இருந்து நீக்​கி​னார்​கள். பிறகு சேர்த்​தார்​கள். மாவட்ட செயலாளர் பதவி கொடுத்​தார்​கள்.

எம்எல்ஏ சீட் கொடுத்து மந்திரி​யும் ஆக்கி​னார்​கள். ஆனால் ஐந்தாவது இடத்​தில் இருந்த என்னை 13-வது இடத்​தில் வைத்​தார்​கள். அதற்காக அம்மாவை கோபித்​துக் கொள்ள இயலுமா? ஆனால், செங்​கோட்​டையன் விஷயத்​தில் அப்படி எதுவும் இல்லை. எடப்​பாடி​யார் தலைமைக் கழகத்​தில் நடக்​கும் எந்த ஒரு தனி ஆய்வை​யும் செங்​கோட்​டையனை விட்டு​விட்டு நடத்​தியதே கிடை​யாது.

வருத்தத்தில் இருக்கும் செங்கோட்டையன் வேறு ஏதேனும் முடிவுகள் எடுக்க வாய்ப்பு உள்ளதா? - அப்​படி​யெல்​லாம் எதுவும் இல்லை. அவர் நேற்று முன்​தினமே அதற்​கெல்​லாம் விளக்​கமாக பதில் அளித்து​விட்​டார். அவர் தவறாக எந்த முடி​வும் எடுக்​க​மாட்​டார்; அப்படி எடுக்​கும் ஆளும் அவர் இல்​லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x