தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published on

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழக மண்டலத் தலைமையகங்கள் முன்பு தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பகுதியாக சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டத்தில், ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றோர் பணப்பலன் உடனே வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி நிலுவையை முழுமையாக வழங்க வேண்டும். சென்னையில் மினிபஸ்சை அரசேஇயக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார், பொருளாளர் சசிக்குமார், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம், தலைவர் ஆர்.துரை, பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in