Published : 13 Feb 2025 12:20 AM
Last Updated : 13 Feb 2025 12:20 AM

பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தைப் பற்றி என்ன தெரியும்? - சீமான் கேள்வி

செய்யாறு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக நேற்று ஆஜராக வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

செய்​யாறு: பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்​களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்​படு​கிறது என்று நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் தெரி​வித்​தார்.

திரு​வண்ணாமலை மாவட்டம் பிரம்​மதேசம் பகுதி​யில் 2022-ல் நடந்த கூட்​டத்​தில் அவதூறாகப் பேசியது தொடர்பாக பிரம்​மதேசம் காவல் நிலை​யத்​தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த வழக்​கின் விசா​ரணைக்காக செய்​யாறு ஒருங்​கிணைந்த நீதி​மன்ற வளாகத்​தில் குற்​ற​வியல் நீதித்​துறை நடுவர் மன்ற நீதிபதி பாக்​கியராஜ் முன்னிலை​யில் சீமான் நேற்று ஆஜரானார். இவ்வழக்கை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளி​வைத்து நீதிபதி உத்தர​விட்​டார்.

நீதி​மன்​றத்​துக்கு வெளியே செய்தி​யாளர்​களிடம் சீமான் கூறிய​தாவது: தமிழகத்​தில் மக்களுடன் கூட்​ட​ணி​வைத்து தேர்​தல்​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறேன். ஈரோடு இடைத்​தேர்​தலில் பணநாயகம் வென்​றிருக்​கிறது. விஜய்​-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு தொடர்பான யூகங்​களில் எனக்கு நாட்​ட​மில்லை. ஏற்கெனவே நாட்​டில் சிறப்பாக ஆட்சி புரிந்த முன்னோர்கள் எந்த வியூகமும் வகுக்க​வில்லை. காமராஜர், அண்ணா போன்ற​வர்கள் வியூக வல்லுநர்கள் உதவி​யுடன் தேர்​தலில் வெற்றி பெறவில்லை.

நாடு, மக்கள், நிலம் குறித்​தெல்​லாம் தெரி​யாமல் அரசி​யலுக்கு ஏன் வர வேண்​டும்? எந்தெந்த தொகு​தி​யில் யாரை நிறுத்​தினால் வெற்றி பெறலாம் என்பதுகூட தெரி​யாதா? எனக்கு மூளை அதிகம் உண்டு. பணம்​தான் இல்லை. எனவே, எனக்கு வியூக வல்லுநர் உதவி தேவை​யில்லை. பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்​தைப் பற்றி என்ன தெரி​யும். பணக்​கொழுப்பு அதிகம் உள்ளவர்​களுக்​குத்​தான் தேர்​தல் ​வியூ​க​மும் தேவைப்​படு​கிறது. வியூக வல்​லுநர்​கள் தேவைப்​படு​கிறார்​கள். இவ்​வாறு சீ​மான்​ கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x