பட்டுக்கோட்டை அருகே குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து பரிதாப உயிரிழப்பு

Published on

தஞ்சாவூா்: பட்டுக்கோட்டை அருகே குடற்புழு நீக்க மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவம், கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சொக்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி கண்ணன் - பரிமளா ஆகியோரின் மகள் கவிபாலா(12). பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இப்பள்ளி மாணவ- மாணவி களுக்கு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினரால், குடற்புழு நீக்க மாத்திரைகள் நேற்று வழங்கப் பட்டன. இந்த மாத்திரையை கவிபாலாவும் நண்பகல் 12 மணி யளவில் உட்கொண்டுள்ளார்.

2 மணியளவில் பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென கவிபாலா மயங்கி விழுந்தார். அவரது மூக்கு மற்றும் வாய் வழியாக ரத்தம் சிந்திருந்தது. இதையடுத்து, ஆசிரியர்கள் துரைசிங்கம், வீரமணி ஆகியோர்கவிபாலாவை, அழகியநாயகி புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு காரில் அழைத்துச் சென்றனர். பின்னர், அங்கிருந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக் குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து கவிபாலா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியின் உடல், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோத னைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேதுபாவாசத் திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி முன்புபொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சுகுமாரன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதுபற்றி பொது சுகாதாரத் துறை தஞ்சாவூர் மாவட்ட துணை இயக்குநர் கலைவாணி கூறும்போது, ‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளத்தூர் பள்ளியில் 389 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்ட நிலையில், மாத்திரை உட்கொண்ட சில மணிநேரங்களில் ஒரு மாணவி மயங்கிவிழுந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து பிரேதப்பரிசோதனைக்கு பின்னர்தான் தெரியவரும்’’ என்றார்.

தஞ்சை மாவட்ட முதன்மைகல்வி அலுவலர்அண்ணாதுரை கூறும்போது, ‘‘மாணவி உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in