Published : 06 Feb 2025 01:04 AM
Last Updated : 06 Feb 2025 01:04 AM

சென்னையின் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பங்கள் வடகிழக்கையும் சென்றடைய வேண்டும்: மத்திய அமைச்சர் அழைப்பு

சென்னை: சென்னை​யின் வளர்ந்த தொழில்​நுட்​பங்கள் வடகிழக்கு மாநிலங்​களை​யும் சென்​றடைய வேண்​டும் என மத்திய அமைச்சர் ஜோதிரா​தித்ய சிந்தியா தெரி​வித்​துள்ளார்.

மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்​பாட்டு அமைச்​சகம் சார்​பில், வடகிழக்கு வர்த்​தகம் மற்றும்முதலீடு தொடர்பான மாநாடு, சென்னை கிண்​டி​யில் நேற்று நடைபெற்​றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்​பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்​கிம், திரிபுரா ஆகிய மாநிலங்​களில் முதலீடுகள் செய்வது குறித்து விளக்கம் அளிக்​கப்​பட்​டது. மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்​பாட்டுத்​துறை அமைச்சர் ஜோதிரா​தித்ய சிந்தியா சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்டு முதலீடுகள் தொடர்பாக எடுத்​துரைத்​தார்.

அப்போது அவர் பேசி​ய​து: பாரம்​பரியம் மற்றும் கலாச்சார வளர்ச்சிமிக்க சென்னை நகரம், இந்தியாவை மற்ற நாடு​களுக்கு பிரதிபலிக்​கும் இடமாக இருந்து வருகிறது. மேலும், நவீன உலகின் தொழில்​நுட்பம் மற்றும் உட்கட்​டமைப்புகளை மற்ற மாநிலங்​களுக்கு எடுத்​துக்​காட்டும் விதமாக திகழ்​கிறது. சென்னை நகரம், தொழில்​நுட்ப துறை​கள், கல்வி நிறு​வனங்​கள், தொழிற்​சாலைகள் வளர்ச்சி, டிஜிட்டல் மாற்​றங்​களுக்கான செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்பம் என அனைத்​தி​லும் முன்னிலை​யில் இருந்து வருகிறது. கிழக்கு கடற்கரை சாலை​யில் செயல்​படும் ஐடிநிறு​வனங்​கள், ரூ.2.5 லட்சம் கோடி வருவாயை நாட்டுக்காக அர்ப்​பணிக்​கின்றன. இது போன்ற வளர்ச்​சியை வடகிழக்கு மாநிலங்​களும் பெற வேண்​டும். அதற்கு முதலீடுகள் அதிகம் தேவை.

கடந்த 10 ஆண்டு​களில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு மத்திய அரசு வடகிழக்கு மாநிலங்​களில் முதலீடு செய்​துள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்​குமதி போக்கு​வரத்​தும் சிறப்பாக இருக்​கிறது.ரூ.18 ஆயிரம் கோடி​யில் ரயில்வே பணிகள் மேற்​கொள்​ளப்​பட்டு வருகின்றன. ரூ.1.2 லட்சம் கோடிக்கான வர்த்​தக​மும் நடந்து வருகிறது. எனவே, சென்னை​யில் முதலீடு செய்​வது​போல் வடகிழக்கு மாநிலங்​களி​லும் முதலீடு செய்ய வாருங்​கள். மற்ற நகரங்​களில் இருந்​தும் இங்கு முதலீடு செய்​தால் இந்த மாநிலங்​களும் தொழில்​நுட்ப ரீதியாக வளர்ச்சி அடையும்.இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்​வில் மிசோரம் மாநில இளைஞர் நலன் மற்றும் விளை​யாட்டுத் துறை அமைச்சர் புலால்​கிங்​லோவா ஹ்மர், வடகிழக்கு பிராந்திய மேம்​பாட்டு அமைச்​சகத்​தின் செயலர் சன்ச்​சல் கு​மார், இணை செயலர் சாந்​தனு, இந்​திய வர்த்​தகம் மற்றும் தொழில்​துறை கூட்​டமைப்​பின் ​மாநில க​வுன்​சில் துணைத் தலை​வர் பூபேஷ் நாக​ராஜன் உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x