Published : 03 Feb 2025 01:06 AM
Last Updated : 03 Feb 2025 01:06 AM

ஈரோட்டில் நாதக-த​பெதிக தொண்டர்களிடையே மோதல்: போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

ஈரோட்டில் நேற்று மோதலில் ஈடுபட்ட நம் தமிழர் கட்சி - தந்தை பெரியார் திராவிடர் கழக தொண்டர்களை தடுத்த போலீஸார்.

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்​சா​ரத்​தின்​போது, நாம் தமிழர் கட்சி மற்றும் தந்தை பெரி​யார் திரா​விடர் கழக தொண்​டர்​களிடையே மோதல் ஏற்பட்​ட​தால் பரப்​பரப்பு ஏற்பட்​டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்தல் வாக்​குப்​ப​திவு வரும் 5-ம் தேதி நடக்​கிறது. இந்த தேர்​தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 46 வேட்​பாளர்கள் போட்​டி​யிடு​கின்​றனர். தேர்​தல் பிரச்​சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலை​யில். பன்னீர் செல்வம் பூங்கா அருகே​யுள்ள சிஎஸ்ஐ தேவால​யத்​தில் பிரார்த்தனை முடிந்து வரும் கிறிஸ்தவ மக்களிடம், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீதாலட்​சுமி வாக்கு சேகரித்தார்.

அப்போது, பெரி​யார் குறித்து நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் பேசி​யதைக் கண்டிக்​கும் வகையில், தந்தை பெரி​யார் திரா​விடர் கழகத்​தினர் அப்பகு​தி​யில் துண்​டுப்​பிரசுரங்களை வழங்​கினர். சீமான் காவி உடை அணிந்து இருப்​பது​போன்ற படம் அந்த துண்​டுப் பிரசுரத்​தில் இடம்​பெற்றிருந்​த​தால், நாதக​வினர் எதிர்ப்புத் தெரி​வித்​தனர்.

இதனால், நாதக – தபெதிக தொண்​டர்கள் இடையே மோதல் ஏற்பட்​டது. இதையடுத்து, அங்கு போலீ​ஸார் குவிக்​கப்பட்​டு, இரு தரப்​பினரை​யும் எச்சரித்​தனர். தொடர்ந்து, பெரி​யாரைக் கண்டித்து நாதகவினர் முழக்​கங்களை எழுப்​பியபடியே பேரணி​யாகச் சென்​றனர். பெரி​யார் குறித்து அவதூறு பரப்பி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்​கா​விட்​டால், நாம் தமிழர் கட்சியினர் மீது பதில் தாக்​குதல் நடத்து​வோம் என தபெதிக நிர்​வாகிகள் எச்சரிக்கை விடுத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x