Published : 01 Feb 2025 07:25 AM
Last Updated : 01 Feb 2025 07:25 AM

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, சிடிஆர்.நிர்மல்குமார்: யாருக்கு என்ன பொறுப்பு?

சென்னை: ​விசிக​வில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக​வில் இருந்து விலகிய சிடிஆர்​.நிர்​மல்​கு​மார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்​தில் இணைந்​தனர். அவர்​களுக்கு தவெக​வில் புதிய பொறுப்புகளை வழங்கி நடிகர் விஜய் அறிவித்​துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்​தில் அமைப்பு ரீதியாக பிரிக்​கப்​பட்ட 120 மாவட்​டங்​களுக்கு புதிய நிர்​வாகிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. அந்தவகை​யில், இரண்டு கட்டங்களாக 38 மாவட்ட செயலா​ளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலை​யில், 3-ம் கட்ட புதிய நிர்​வாகிகள் நியமனம் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்​றது. இதில், கட்சி​யின் தலைவர் விஜய் புதிதாக தேர்ந்​தெடுக்​கப்​பட்ட நிர்​வாகி​களுக்கு நியமன கடிதத்தை வழங்கினார்.

இந்நிலை​யில், விசிக​வில் துணை பொதுச் செயலா​ளராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா, அக்கட்​சி​யில் இருந்து விலகிய நிலை​யில், நேற்று அவர் விஜய்முன்னிலை​யில் தவெக​வில் இணைந்​தார். இவரைத் தொடர்ந்து, அதிமுக​வில் தகவல் தொழில்​நுட்பப் பிரிவு இணைச் செயலா​ளராக இருந்த சிடிஆர் நிர்மல் குமாரும் நேற்று தவெக​வில் இணைந்​தார்.

இதன்படி தேர்தல் பிரச்சார மேலாண்​மைப் பொதுச் செயலா​ளராக ஆதவ் அர்ஜுனா​வும், தகவல் தொழில்​நுட்ப துணைப் பொதுச் செயலா​ளராக சிடிஆர்​. நிர்​மல்​கு​மாரும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதுதவிர தலைமை கழக இணைப் பொருளாளராக பி.ஜெகதீஷ், கொள்​கைப் பரப்புச் செயலா​ளராக ஏ.ராஜ்மோகன், கொள்​கைபரப்பு இணைச் செயலா​ளர்​களாக லயோலா மணி, ஏ.சம்பத்​கு​மார், ஜெ.கேத்​ரின் பாண்​டியன் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், செய்தித் தொடர்​பாளராக எஸ்.வீரவிக்​னேஷ்வரன், இணைச் செய்தி தொடர்​பாளர் எஸ்.ரமேஷ், ஐடி பிரிவு ஒருங்​கிணைப்​பாளர் ஆர்.ஜெயபிர​காஷ், இணை ஒருங்​கிணைப்​பாளர்​களாக ஏ.குருசரண், ஆர்.ஜெ.ரஞ்சன் குமார், சமூக ஊடகப்​பிரிவு ஒருங்​கிணைப்​பாளர் ஆர்.குரு​மூர்த்தி, இணை ஒருங்​கிணைப்​பாளர்​களாக
ஆர்.ராம்​கு​மார், பி.வெங்​கடேஷ், ஆர்.நிரேஷ்கு​மார், எஸ்.அறிவானந்​தம், ஆர்.​விஷ்ணு, ஏ.ப்​ளோரியா இமாக்​குலேட் ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இந்நிலை​யில், அரசியல் வியூக வகுப்​பாளர் ஜான் ஆரோக்​கியசாமி​யுடன் இணைந்து, அவரது அரசி​யல் ​வியூ​கங்​களைப் பின்​பற்றி, தேர்​தல் பிரச்​சா​ரங்களை வடிவ​மைத்து, தேர்​தல் மேலாண்மை பணிகளை ஆதவ் அர்​ஜுனா மேற்​கொள்​வார் என ​விஜய் தெரி​வித்​துள்ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x