Published : 31 Jan 2025 06:34 AM
Last Updated : 31 Jan 2025 06:34 AM

ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்வம் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்​டங்​களில், 876 கிராமங்​களில் 3 - 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இதில் 35 சதவீதம் 8-ம் வகுப்பு மாணவ, மாணவியர்​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க முடிய​வில்லை. 64 சதவீதம் 5-ம் வகுப்பு மாணவ, மாணவி​களால் 2-ம் வகுப்பு பாடங்களை படிக்க இயலவில்லை என கூறப்​பட்​டுள்​ளது. மேலும், 12 சதவீதம் 3-ம் வகுப்பு வகுப்பு மாணவர்கள் மட்டுமே 2-ம் வகுப்பு பாடங்களை படிக்​கின்​றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்​பிடு​கிறது.

உத்தரகாண்ட், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களை விட தமிழ்​நாடு பின்​தங்கி இருப்​பதாக அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு, ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்​போது முறையாக நிரப்​பப்​படாதது, ஆயிரக்​கணக்கான பள்ளி​களில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்​பது, சமவேலைக்கு சம ஊதியம் அளிக்​காதது தான் காரணம். எனவே மாணவ, மாணவியகளின் நலனைக் கருத்​தில் கொண்டு, ஆசிரியர் காலிப் பணியிடங் களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முறையாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x