Published : 31 Jan 2025 06:34 AM
Last Updated : 31 Jan 2025 06:34 AM

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து சைபர் க்ரைம் டிஎஸ்பி விலகல்

டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து டிஎஸ்பி விலகி உள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பொது வெளியில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், இச் சம்பவம் குறித்து விசாரணை செய்து, சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் புக்யா சினேக பிரியா, ஆவடி காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல்துறையின் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு விரைவாக விசாரிக்கும் என என்று உயர் நீதிமன்றம் கூறியது. அதன்படி சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த இரு வாரங்களாக, இரு வழக்குகள் குறித்தும் தீவிர விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஎஸ்பி ராகவேந்திரா கே.ரவி, தான் அந்த குழுவில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். புலனாய்வுக் குழுவில் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும், கடுமையான நெருக்கடியுடன் பணிபுரிய வேண்டிய சூழல் இருப்பதாலும் ரவி, இந்த முடிவை எடுத்திருப்பதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து டிஎஸ்பி பணி விலகல் தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலையும் தமிழக காவல்துறை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x