Published : 31 Jan 2025 06:30 AM
Last Updated : 31 Jan 2025 06:30 AM

வெங்கய்ய நாயுடு இல்ல திருமண விழா: அமித் ஷா இன்று சென்னை வருகை - பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக ஏற்பாடு

சென்னை: குடியரசு முன்​னாள் துணைத்​தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின் இல்லத் திருமண விழா​வில் பங்கேற்​ப​தற்​காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது.

குடியரசு முன்​னாள் துணைத் தலைவர் வெங்​கய்ய நாயுடு​வின் பேரன் திருமண விழா மாமல்​லபுரத்​தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று மாலை 6 மணிக்கு டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார். இதையொட்டி, பாஜக சென்னை பெருங்​கோட்டம் சார்​பில் விமான நிலை​யத்​தில் அமித் ஷாவுக்கு பிரம்​மாண்ட வரவேற்பு அளிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்நிகழ்ச்​சிக்கு பொறுப்​பாளர்​களாக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்​வம், மாநில செய்தித் தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிரசாத், மாநில விளை​யாட்டுப்​பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோரை மாநில தலைவர் அண்ணாமலை நியமித்​துள்ளார்.

பரதநாட்​டி​யம், பறை இசை, செண்டை மேளம், சிவ வாத்​தி​யம், கரகாட்​டம், ஒயிலாட்​டம், சென்னை கானா, திருநங்​கைகள் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்​சிகளுக்கு பாஜக​வினர் ஏற்பாடு செய்​துள்ளனர். இதுதொடர்​பாக, பொறுப்​பாளர்​களுடன் அண்ணாமலை நேற்று ஆலோசனை நடத்​தினார்.

குடியரசு துணைத் தலைவர்: வெங்​கய்ய நாயுடு இல்ல திருமண விழா​வில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய இணை அமைச்சர் எல்.​முருகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்​களும் கலந்​து​கொள்​கின்​றனர்.

ட்ரோன் பறக்க தடை: சென்னை காவல்​துறை வெளி​யிட்​டுள்ள செய்திக்​குறிப்​பில், “துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் ஜன.31-ம் தேதி (இன்று) சென்னைக்கு வருகை தந்து, முட்டுக்​காடு மற்றும் மாமல்​லபுரத்​தில் நடைபெறும் நிகழ்ச்​சிகளில் பங்கேற்​கிறார். எனவே, 31-ம் தேதி சென்னை பெருநகர காவல் எல்லைக்​குட்​பட்ட, சென்னை விமான நிலையம், ராஜ் பவன், விவிஐபி பயணிக்கும் வழித்​தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்​கப்​பட்டு, அப்பகு​தி​களில் ட்ரோன்​கள், ரிமோட் மூலம் இயக்​கப்​படும் மைக்​ரோலைட் ஏர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்​டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் ​போன்றவைபறக்க விட தடை ​வி​திக்கப்​படுகிறது” என தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

ஈசிஆரில் போக்குவரத்து தடை: குடியரசு துணை தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையை (ஈசிஆர்) பொதுமக்கள் பயன்படுத்த போலீஸார் தடை விதித்துள்ளனர். எனவே, சென்னை விமான நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் வாகனங்கள், பழைய மாமல்லபுரம் சாலையை (ஓஎம்ஆர்) மாற்றுப்பாதையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x