Published : 30 Jan 2025 06:18 AM
Last Updated : 30 Jan 2025 06:18 AM

தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்துதரவில்லை: ஜெயக்குமார்

தாம்பரம் மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூரில் நேற்று நடைபெற்றது. | படம்: எம்.முத்துகணேஷ் |

பெருங்களத்தூர்: தாம்பரம் மாநகராட்சி 4-வது மண்டலம் பகுதியில் அடிப்படை வசதிகளை திமுக அரசு செய்யத் தவறியதாக, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பெருங்களத்தூரில் நேற்று நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்றுப் பேசியதாவது: குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் 18 பவுன் செயின் பறிப்பு நடைபெற்று உள்ளது. கஞ்சாபோதை வஸ்துகள் சர்வ சாதாரணமாக கிடைக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. சமுதாயத்துக்கு கேடு விளைவிக்கின்ற விஷயங்கள், செயல்களில் அதிமுகவினர் ஈடுபட மாட்டார்கள். ஆனால் திமுகவினர் இதற்கு நேர்மாறாக செயல்படுவார்கள்.

அதேநேரம், எதைப் பற்றியும்கவலைப்படாமல் கமிஷன், கலெக் ஷன், கரெக் ஷன் இந்த மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு முதல்வர் செயல்படுகிறார். அவர் வழியிலேயே இந்த அரசும் செயல்படுகிறது. நகராட்சியாக இருந்த தாம்பரம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டாலும் கூட எவ்வித அடிப்படை வசதியும் இதுவரை நடைபெறவில்லை.

பல்லாவரத்தில் 13-வது வார்டில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து3 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அமைச்சரோ அதை ஃபுட் பாய்சன் என்கிறார். சுகாதாரத் துறை அமைச்சரோ ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளதாகக் கூறுகிறார். முரண்பட்ட தகவல்களை மக்களுக்கு தெரிவித்து உண்மையை மறைக்கின்றனர்.

தாம்பரத்தில் சாலைகள் சரியில் லாமல் படுமோசமாக உள்ளன. மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு என சாமானிய மக்கள் மீது வரிச் சுவைகளையும் விலை ஏற்றத்தையும் இந்த அரசு சாதனையாக கொண்டுள்ளது. 2026-ல் அதிமுக ஆட்சி வரும் 2026-ம் ஆண்டில் பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி மலர வேண்டும்.

திமுகவினரின் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சின்னையா, மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், பல்லா வரம் முன்னாள் எம்எல்ஏ தன்சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x