Published : 16 Jan 2025 11:13 AM
Last Updated : 16 Jan 2025 11:13 AM

போலீஸ் பக்ருதீனை மதுரைக்கு மாற்ற கோரி வழக்கு: அதிகாரிகள் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ​விசாரணை கைதி போலீஸ் பக்ருதீனை சென்னை புழல் சிறை​யில் இருந்து மதுரைக்கு மாற்ற கோரி அவரது தாய் அளித்த மனுவை 4 வாரத்​தில் பரிசீலிக்​க உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டுள்​ளது.

கடந்த 2011ம் ஆண்டு அத்வானி ரத யாத்​திரை​யின்​போது மதுரை திரு​மங்​கலம் அருகே ஆலம்​பட்டி தரைப் ​பாலத்​தில் பைப் வெடி குண்​டுகள் வைத்த வழக்கு, கடந்த 2013ம் ஆண்டு பாஜக மாநில பொதுச் செயலா​ளராக பதவி வகித்த சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்​கு​களில் கைதான போலீஸ் பக்ருதீன் கடந்த 10 ஆண்டு​களுக்​கும் மேலாக விசாரணை கைதியாக சென்னை புழல் சிறை​யில் உள்​ளார்.

இந்நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவரது தாய் செய்யது மீரா தாக்கல் செய்த மனுவில்,”புழல் சிறை​யில் தனிமை​யில் அடைக்​கப்​பட்டுள்ள எனது மகனை சிறைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து சித்​ரவதை செய்து வருகின்​றனர். சிறைக்​குள் முறையாக அவருக்கு சிகிச்​சை​யும் அளிக்​கப்​பட​வில்லை. எனவே, தனியார் மருத்​துவ​மனை​யில் சேர்த்து சிகிச்சை அளிக்​கும் வகையில் புழல் சிறை​யில் இருந்து அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற வேண்​டும் ’ என்று கோரி​யிருந்​தார்.

நீதிப​திகள் எஸ்.எம்​.சுப்​பிரமணி​யம், எம்.ஜோ​திராமன் அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்​தது. அப்போது அரசு தரப்​பில், ‘சிறை மாற்றம் தொடர்பான அவரது மனு பரிசீலனை​யில் உள்ளது’ என்று தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி​கள், ‘புழல் சிறை​யில் இருந்து மதுரைக்கு போலீஸ் பக்ருதீனை மாற்றுவது தொடர்பாக அளி்க்​கப்​பட்ட மனுவை சிறைத் துறை அதிகாரி​கள் 4 வாரத்​தில் பரிசீலித்து உரிய உத்​தரவு பிறப்​பிக்க வேண்​டும்’ என உத்​தர​விட்டு வழக்கை ​முடித்து வைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x