Published : 16 Jan 2025 07:33 AM
Last Updated : 16 Jan 2025 07:33 AM
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு வசதியாக, தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்.06168) தூத்துக்குடியில் இருந்து 19-ம் தேதி மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம் வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் - மதுரை இடையே வரும் 18-ம் தேதி முன்பதிவில்லா மெமு ரயில் (வண்டி எண்.06061) இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06062) மதுரையில் இருந்து 19-ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இடம் மாற்றம்: திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (06070), ஜனவரி 16 (இன்று), 23, 30, பிப்ரவரி 6 ஆகிய நாட்களில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06069) ஜனவரி 17 (நாளை), 24, 31, பிப்ரவரி 7 ஆகிய நாட்களில் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment