Published : 12 Jan 2025 07:34 AM
Last Updated : 12 Jan 2025 07:34 AM

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

சென்னை: சட்​டப்​பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடாமல் ஒத்திவைக்​கப்​படு​வதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்​துள்ளார்.

சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்​கும் தீர்​மானம் மீதான விவாதம் ஜன.8 முதல் 10-ம் தேதி வரை நடைபெற்​றது. அந்த விவாதத்​துக்கு முதல்வர் ஸ்டா​லின் நேற்று பதில் அளித்​தார். 6 மசோதாக்​களும் நிறைவேற்​றப்​பட்டன.

ஏற்கெனவே அறிவிக்​கப்​பட்​டபடி, கூட்டத் தொடர் நேற்று நிறைவடைந்​தது. மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடா​மல் பேரவை ஒத்​திவைக்​கப்​படு​வதாக பேர​வைத் தலை​வர் அப்​பாவு அறி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x