Published : 09 Jan 2025 05:55 AM
Last Updated : 09 Jan 2025 05:55 AM

அதிமுக நிர்​வாகி கட்சியி​லிருந்து நீக்கம்

சென்னை: அண்ணாநகர் மேற்கு பகுதி​யைச் சேர்ந்த ப.சு​தாகர், 103-வது வடக்கு அதிமுக வட்டச் செயலா​ளராக இருந்​தார். இவர் அண்ணாநகர் பகுதி​யில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்​கில், போக்சோ சட்டத்​தின் கீழ் போலீ​ஸாரால் கைது செய்​யப்​பட்​டார். இந்நிலை​யில் அவர் அதிமுக​விலிருந்து நீக்​கப்​பட்​டுள்​ளார்.

கட்சி​யின், கொள்கை, கோட்​பாடு​களுக்கு முரணாகவும், கட்சிக்கு களங்​க​மும், அவப்​பெயரும் உண்டாகும் விதத்​தில் ப.சு​தாகர் செயல்​பட்​டுள்​ளதாகவும், இதன் காரணமாக அவர் கட்சி​யின் அடிப்படை உறுப்​பினர் பொறுப்பு உட்பட அனைத்​துப் பொறுப்புகளில் இருந்​தும் நீக்கப்படுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x