Published : 08 Jan 2025 06:08 AM
Last Updated : 08 Jan 2025 06:08 AM

​போகி பண்டிகைக்கு பிளாஸ்​டிக் பொருட்கள் எரிப்பதை தவிர்க்க அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: போகிப் பண்டிகை​யையொட்டி பயன்​பாட்டில் இல்லாத பழைய துணி, பிளாஸ்​டிக் பொருட்​கள், டயர் மற்றும் ரப்பர் டியூப் போன்ற​வற்றை எரிப்​ப​தால் காற்று மாசுபாடு ஏற்படு​வதுடன், மக்களுக்​கும் உடல்​நலம் பாதிக்​கப்​படு​கிறது.

எனவே, மாநக​ராட்​சி​யின் 15 மண்டலங்​களில் இருக்​கும் அனைத்து வார்​டு​களி​லும் பொது​மக்கள் பிளாஸ்​டிக், டயர்​கள், பழைய துணிகள் போன்ற​வற்றை எரிப்பதை தவிர்க்க வேண்​டும். அதற்​குப் பதிலாக அவற்றை தனியாக சேகரித்து, மாநக​ராட்சி தூய்​மைப் பணியாளர்​களிடம் ஒப்படைக்​கு​மாறு அறிவுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு அ​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x