Published : 07 Jan 2025 06:02 AM
Last Updated : 07 Jan 2025 06:02 AM
சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சதீஷ் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்காத போலீஸார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சியினர், பின்னர் சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அனைவரையும் கைது செய்த போலீஸார், அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையே போராட்டம் தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "ஜனநாயக முறைப்படி, எவிவித அசம்பாவிதங்களும் நடக்காமல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். மக்களுக்காக நாம் நடத்தும் ஒவ்வொரு போராட்டமும், அவர்களது மனதில் நீங்கா இடம் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT