Published : 07 Jan 2025 05:54 AM
Last Updated : 07 Jan 2025 05:54 AM

49-வது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி: சென்னை தீவு திடலில் தொடங்கியது

சென்னை: தீவுத்திடலில் 49-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

இவ்விழாவில் சென்னை மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், தயாநிதி மாறன் எம்.பி, சுற்றுலாத்துறை செயலர் பி.சந்திரமோகன், சுற்றுலா ஆணையர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பொருட்காட்சியில் 85 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 30 தனியார் அரங்கு களும் உள்ளன. ராட்சத விளையாட்டு சாதனங்கள், சிறுவர் ரயில் பெட்டி,பனிக்கட்டி உலகம், அவதார் உலகம், கடற்கன்னி ஷோ, மீன் காட்சி யகம், 3-டி தியேட்டர், என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40. சிறுவர்களுக்கு (4 வயது 10 வயது வரை) ரூ.25. மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.25. பொருட்காட்சியை திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 3 முதல் இரவு 10 மணி வரையும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 10 மணி வரையும் கண்டு களிக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x